மயிலாப்பூர் ஸ்டார் தொகுதியில் ஸ்டார் வார்.. வேட்பாளர் குழப்பத்தால் விழிபிதுங்கும் சென்னை தொண்டர்கள்
சென்னை: தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டன.. ஆனாலும், திமுகவை போலவே அதிமுக-பாஜக கூட்டணிக்குள் நிலவும் தொகுதி பங்கீடு குழப்பங்களும், உட்கட்சி மோதல்களும் தொண்டர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன... இது அந்தந்த கட்சி தொண்டர்களை ஒருவித குழப்பத்திற்கும், சோர்வுக்கும் ஆளாக்கி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகள், சீட் எண்ணிக்கை, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் மூழ்கி உள்ளனர்..
இதனால் எந்த கூட்டணியிலும் உறுதியான, இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை.. வழக்கமான தொகுதிகளில் தொடர்ந்து போட்டியிடும் தலைவர்கள்கூட, தற்போது அமைதி காத்து வருகிறார்கள்..

அதிமுக கூட்டணி சலசலப்பு
நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதிகளில் எந்த கட்சி போட்டியிடும், எந்த மூத்த தலைவர் களம் இறங்குவார் என்பதில் நீடிக்கும் மர்மம், களப்பணியில் ஈடுபட்டுள்ள தொண்டர்களை விழிபிதுங்க செய்துள்ளது. இதனால் யாருக்கு எந்த தொகுதி என்று தெரியாமலேயே உள்ளது.. இது அதிமுக கூட்டணியிலும் உச்சக்கட்ட குழப்பத்தை தந்துள்ளது.
உதாரணத்துக்கு மயிலாப்பூர் தொகுதியை எடுத்து கொண்டால், அதிமுகவுக்கும், கூட்டணி கட்சிக்கும் இழுபறியில் உள்ளதாம்..
மயிலாப்பூரை பொறுத்தவரை பாரம்பரியமாகவே கல்வி அறிவு மிக்கவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்கு வாக்காளர்கள் கட்சி பாகுபாடின்றி வேட்பாளரின் ஆளுமைக்கும் கொள்கைக்கும் முக்கியத்துவம் அளிப்பவர்கள்....
மயிலாப்பூர் தொகுதி யாருக்கு
கடந்த காலங்களில் திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுமே இங்கு வெற்றி பெற்று வந்தாலும், சமீபகாலமாக பாஜக இங்கு தன்னுடைய வாக்கு வங்கியை கணிசமாக உயர்த்தி வருவது கவனிக்கத்தக்கது... முக்கியமாக நகர்ப்புற வாக்குகளைப் பிரிப்பதில் பாஜக காட்டி வரும் ஆர்வம், அக்கூட்டணியில் தொகுதி பங்கீட்டுச் சிக்கலை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.
பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தனக்கு அறிமுகமான விருகம்பாக்கம் அல்லது வேளச்சேரியை விட, மயிலாப்பூரை ஒரு பாதுகாப்பான புகலிடமாக நினைக்கிறாராம்..
விருகம்பாக்கத்தில் அதிமுகவின் பலமான பிடிமானமும், வேளச்சேரியில் நிலவும் உட்கட்சி பூசல்களுமே இந்த முடிவை தமிழிசை எடுக்க காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.. அதேபோல மயிலாப்பூரில் பாஜகவின் இரட்டை இலக்க வாக்கு சதவீதம் தமிழிசைக்கு ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது.
லிஸ்ட்டில் அதிமுக பிரபலங்கள்
ஆனால், மயிலாப்பூர் தொகுதியை அதிமுக விட்டுக்கொடுக்க தயங்குவது போல தெரிகிறது.. முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி, தனக்கு மயிலாப்பூர் தொகுதி வேண்டும் என்று கேட்கிறாராம்..
அதேபோல ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன், அதிமுக நிர்வாகி நிர்மலா பெரியசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், மாவட்டச் செயலாளர் அசோக் போன்றோரும் இதே மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்கிறார்களாம்..
அதிமுகவுக்குள்ளேயே இப்படியொரு குழப்பம் உள்ளபோது, கூட்டணியும் இதே மயிலாப்பூரை குறி வைத்து வருகிறது.. இது இழுபறியான சூழலை கூட்டணிக்குள் உருவாக்கியுள்ளது.
மறுபுறம், திமுக கூட்டணியில் இணைந்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், நகர்ப்புற வாக்குகளை அறுவடை செய்ய மயிலாப்பூரையே குறி வைப்பதாக தெரிகிறது.. ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை மற்றும் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான இழுபறிகள் அங்குள்ள கூட்டணியிலும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்னறன..
முடங்கி கிடக்கும் தொண்டர்கள்
மயிலாப்பூர் தொகுதி ஒரு உதாரணம்தான்.. இதுபோல எந்த தலைவர்கள்? எங்கே போட்டியிட போகிறார்கள்? என்ற தெளிவு இல்லாததால் அடிமட்டத் தொண்டர்கள் தேர்தல் பணிகளை தொடங்க முடியாமல் முடங்கி கிடக்கிறார்களாம்..
கூட்டணி, தொகுதி, சீட் அனைத்தும் இறுதி செய்யப்பட்டு, இந்த குழப்பங்களுக்கு அரசியல் தலைமைகள் விரைவில் முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே, தொண்டர்கள் உற்சாகத்துடன் களம் காண முடியும்... பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
சென்னைக்கு சரிபட்டு வராது.. டபுள் டெக்கர் ஓபன் டாப் பஸ் திட்டத்தை கைவிடும் எம்டிசி.. பயணிகளுக்கு ஏமாற்றம் -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
லட்சிய ஜனநாயக கட்சிக்கு தர்பூசணி சின்னம்.. NDA கூட்டணியில் இடம்பெறுமா? இல்லையா? -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி












Click it and Unblock the Notifications