பெண் பிள்ளைகளை கையேந்த வைப்பதுதான் புதுமைப் பெண் திட்டமா? தமிழக அரசுக்கு சீமான் கடும் எதிர்ப்பு
சென்னை: தமிழக அரசின் மாணவிகளுக்கான ரூ1,000 நிதி உதவி வழங்கும் திட்டத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக எதிர்த்துள்ளார். பெண் பிள்ளைகளை கையேந்த வைப்பதுதான் புதுமைப் பெண் திட்டமா என்றும் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவில்களில் சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதுவோரை பணி நியமனம் செய்தது யார்? இந்து அறநிலையத்துறை கோவில்களில் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லும் குருமார்களை இத்தனை ஆண்டுகாலம் கோவிலுக்குள் விட்டது யார்?
ரூ696 கோடி செலவில் ஒரு மாணவிக்கு தலா ரூ1,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நெல்லை கொள்முதல் செய்து ஒரு தகர சீட்டில் சேமிப்பு கிடங்கு கட்டி விவசாயிகளின் நெல்லை பாதுகாக்க முடியாதா? ஆனால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை அப்படியே தார்பாயை போட்டு மூடி நனையவிட்டுள்ளது அரசு. விவசாயிகளின் உழைப்பு மரியாதை தரவில்லை.

புதுமை பெண் திட்டமா இது?
பெண் பிள்ளைகள் படிப்பதற்கு கையேந்த விடுகிறது தமிழக அரசு. அந்த பெண் பிள்ளைகளின் தந்தையின் காசை எடுத்து கொடுக்கிறது தமிழக அரசு. இது என்ன புதுமைப் பெண் திட்டம்? நீங்க படைக்கப் போகிற புதுமையா இது? இதைவிட அத்திட்டத்துக்கு கேவலமாக பெயர் வைக்க முடியுமா? கல்வியை முதலில் தரமாக கொடுங்க. அரசை நடத்துகிறவர்கள் தரம்கெட்டவர்கள். அதனால் அரசு தரும் அத்தனையும் தரமில்லாமல் இருக்கிறது.

பொறுப்பற்ற செயல்
முதல்வரே நிதி போதுமானதாக இல்லை.. குடும்ப தலைவிகளுக்கு ரூ1,000 வழங்க முடியவில்லை என்கிறார். ஆனால் மாணவிகளுக்கு ரூ1,000 வழங்க நிதி எங்கே இருந்து வந்தது? மாணவிகள் இந்த தொகையை கேட்டாங்களா? எல்லாமே பொறுப்பற்ற செயலாக இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்றும் ஆளும் கட்சியாகிவிட்ட நிலையில் வேறு ஒன்றுமாக பேசுகிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போது 8 வழி சாலை திட்டத்தை எதிர்க்கவே இல்லை என்று அமைச்சர் எ.வ.வேலு சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் போது அது 8 வழி சாலை.. ஸ்டாலின் முதல்வராக இருக்கும் இப்போது பயண நேர குறைப்பு சாலை என்கிறார்கள்.

வேலையே கிடையாது எனக்கு...
மத்திய அரசுக்கு சொந்தமாக ஒரு விமானம் கிடையாது. ஆனால் 5,000 ஏக்கரில் விமான நிலையம் கட்டுகிறோம் என்கிறீர்கள். இது வெட்கமாக இல்லையா? பரந்தூரில் நிச்சயம் விமான நிலையம் வரவே வராது. கடலுக்குள் கருணாநிதி நினைவாக பேனா வைப்பதும், பரந்தூர் விமான நிலையம் கட்டுவதும் நடக்கவே நடக்காது. எனக்கு ஒருவேலையுமே கிடையாது... கோடி கோடியாய் பணம் இருக்கு.. ரெய்டு விடுவாங்க என்ற பயமும் இல்லை. பரந்தூர் விமான நிலைய மதிப்பீடு ரூ40,000 கோடி எனில் குறைந்தது ரூ15,000 கோடி அடிக்கலாம் என கணக்கு போடுகின்றனர். இந்த விமான நிலையத்தை அதானியை கட்ட விட்டால் என்னைப் போன்றவர்கள் சண்டை போடுவார்கள். அதனால் அரசாங்கமே விமான நிலையத்தை கட்டி அதானிக்கு கொடுக்கிறது.

பாஜக அரசும் ராகுல் நடைபயணமும்
மன்மோகன்சிங் ஆட்சியின் சகிக்க முடியாத சீர்கேடுகள், ஊழல்களால்தான் பாஜகவுக்கு மக்கள் வாய்ப்பளித்தனர். ஆட்சி அதிகாரத்தை பிடித்த பாஜக இப்போது அதனைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் செய்த தவறுகளின் விளைவுதான் பாஜக ஆட்சி. விடுதலை பெற்ற இந்தியாவை அரை நூற்றாண்டாக ஆண்ட குடும்பம் நேரு குடும்பம். அந்த குடும்பத்தின் ஆட்சியில் ஏற்பட்ட வறுமை, வேலைவாய்ப்பின்மை நிலைமை என்ன என்பதை கிராமந்தோறும் சென்று ராகுல் காந்தி அறிந்து கொள்ளத்தான் வேண்டும். அதனால் ராகுல் காந்தி 5 மாதம் நடப்பதை வரவேற்கிறேன். அதற்கு பின்னராவது புத்தர் போல ஞானம் கிடைக்கிறதா என பார்க்கலாம். இவ்வாறு சீமான் கூறினார்.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்!












Click it and Unblock the Notifications