விமானம் விர்ருனு பறக்குது..கிர்ருனு தலை சுத்துது! பரந்தூர் 2வது விமான நிலையத்துக்கு சீமான் எதிர்ப்பு
சென்னை : சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக 3000 ஏக்கர் வேளாண் நிலங்களை அழிக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தி வரும் நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விமான நிலையங்களில் சென்னை சர்வதேச விமான நிலையம் ஒன்றாக திகழ்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த விமான நிலையத்திலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு நூற்றுக்கணக்கான விமானங்கள் தினம் தோறும் இயக்கப்படுகின்றன.
அடுத்து சில ஆண்டுகளில் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் சென்னை விமான நிலையத்தில் இட நெருக்கடி ஏற்படும் ஏற்படும் வாய்ப்புள்ளது. இட நெருக்கடியை தவிர்க்கும் வகையில் சென்னைக்கு அருகில் புதிய விமான நிலையம் அமைக்க பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு வந்தது.

பரந்தூர் விமான நிலையம்
இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், படாளம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர், திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் ஆகிய நான்கு இடங்களை தமிழக அரசு தேர்வு செய்தது. அதில் பரந்தூர், பன்னூர் ஆகிய இரண்டு இடங்கள் மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் கூறியுள்ளார்.

முதற்கட்ட பணிகள்
இதனை அடுத்து அங்கு விமான நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் விமான நிலைய கட்டுமான பணிகளுக்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு பெரிய அளவில் எதிர்ப்புகள் இல்லை என்றாலும் அப்பகுதி மக்கள் அதிக அளவில் விவசாய நிலங்களும் ஏரி குளங்கள் இருப்பதால் விவசாயத்தை பாதிக்காத வகையில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சீமான் எதிர்ப்பு
அதே நேரத்தில் பரந்தூரில் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக 3000 ஏக்கர் வேளாண் நிலங்களை அழிக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தி வருகிறார் இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் ஆயிரக்கணக்கான மக்களின் குடியிருப்புகளையும் 30க்கும் மேற்பட்ட நீர் நிலைகளை அழித்து விமான நிலையம் அமைக்க கண்டனத்துக்கு உரியது எனக் கூறியிருந்தார்.

ட்விட்டர் பதிவு
மேலும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யும் பணிகள் வேகமாக நடக்கும் நிலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தேவை என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தநிலையில்," 4500 ஏக்கரில் வானூர்தி நிலையம்! வயிற்றில் பசியோடு, மக்கள் வேடிக்கைப் பார்த்தார்கள்! விமானம் விர்ர் என்று பறந்தது! தலை கிர்ர் என்று சுற்றியது!" என பரந்தூர் விமான நிலையம் குறித்து சீமான் பதிவிட்டுள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications