'சூப்பர் ஸ்டார்' ரஜினிக்கு நிரந்தரம் அல்ல.. விஜய்தான் இப்ப சூப்பர் ஸ்டார்.. கோதாவில் குதித்த சீமான்!
சென்னை: தமிழ்த் திரை உலகில் சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது நிரந்தரமானது அல்ல; ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டார்; இப்போது விஜய் உச்சத்தில் இருக்கிறார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் திரைப்பட இயக்குநருமான சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு அரசியல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அண்மையில் அவரது பாபா திரைப்படம் மறு வெளியீடு என திரையிடப்பட்டது. ஆனால் சொல்லிக் கொள்ளும்படியாக பாபா படம் ஓடவில்லை. தற்போது திரை உலகில் விஜய், அஜித் என இரு நடிகர்களிடையேதான் உச்சகட்ட போட்டி நடந்து வருகிறது.

பொங்கல் விழாவுக்கு அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு ஆகிய இரு திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த இரு படங்களை முன்வைத்தும் பல்வேறு விவாதங்கள் களைகட்டி வருகின்றன. இந்த விவாதங்களின் ஒரு பகுதியாக, தமிழ்த் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ரஜினிகாந்த். அதாவது முன்னாள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் விஜய் என மூத்த சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி கூறியிருந்தார்.
பத்திரிகையாளர் பிஸ்மியின் இந்த கருத்தால் ரஜினி ரசிகர்கள் கொந்தளித்து போயினர். பிஸ்மியின் வீட்டுக்குள் நுழைந்து அவருடன் வாதம் செய்து மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்களை எச்சரித்து சீமான் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்த்திரைத்துறையில் உச்ச நட்சத்திரம் (சூப்பர் ஸ்டார்) எனும் உயரிய இடம் எவருக்கும் நிரந்தரமானதல்ல; ஒவ்வொரு காலகட்டத்திலும், அந்தந்த தலைமுறைக்கேற்ப மாறக்கூடியது. திரைப்படங்களுக்கு இருக்கின்ற வரவேற்பு, மக்கள் அளிக்கும் பெருவாரியான ஆதரவு ஆகியவற்றைப் பொறுத்து அந்த இடம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது.
தமிழ்த்திரைப்படங்கள் வெளியான தொடக்கக் காலத்தில் தியாகராஜ பாகவதர் தமிழத்திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தார். அதன்பிறகு, ஐயா எம்.ஜி.ஆர் அவர்கள் உச்ச நட்சத்திரமாக இருந்தார். எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக அரசியலில் கோலோச்சிய காலத்திலேயே ஐயா ரஜினிகாந்த் அவர்கள் திரைத்திரையில் உச்ச நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்டார். அதன்பின், தற்போதைய தலைமுறையினர் பெருமளவு விரும்பத்தக்கவராக தம்பி விஜய் அவர்கள் உச்சத்தில் இருக்கிறார். இந்த எதார்த்தச் சூழலை விளக்கி, அதுகுறித்த தனது கருத்துகளை ஊடகத்தில் தெரிவித்ததற்காக திரை விமர்சகரும், பத்திரிகையாளருமான சகோதரர் பிஸ்மி அவர்களது அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்த முனைந்த திரு.ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்களின் செயல் நாகரீகமானதன்று.
ஐயா ரஜினிகாந்த் ரசிகர்கள் என்றால் அனுபவமும், முதிர்ச்சியும், பக்குவமும், தெளிவும் பெற்றவர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். ஆனால் அப்படியானவர்களில் சிலரே, மாற்றுக்கருத்துத் தெரிவித்ததற்காக பத்திரிகையாளர் ஒருவரது இருப்பிடத்திற்கே சென்று, ஒருமையில் பேசி மிரட்டுவது வருந்தத்தக்கதாகவும், கவலையளிப்பதாகவும் இருக்கின்றது. இதுபோன்ற செயல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. ஐயா ரஜினிகாந்த் அவர்களே இதனை விரும்பமாட்டார்கள். இத்தகைய செயல்களானது ஐயா ரஜினிகாந்த் அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் களங்கத்தையே ஏற்படுத்தும். ஆகவே அவரது ரசிகர்கள் இனியும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications