எதிர்பார்க்கவே இல்லையே! திடீரென நாம் தமிழருடன் போட்டிக்கு இறங்கிய பாஜக.. சீமான் vs அண்ணாமலை.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் களத்தில் நாம் தமிழர் - பாஜக இடையே கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டு உள்ளது. சீமான் - அண்ணாமலை இடையே கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டு உள்ளது.

2024 லோக்சபா தேர்தலில் அதிமுக - பாஜக இடையில் கூட்டணி அமைக்கப்படவில்லை. பெரும் விவாதம், மோதலுக்கு பின்பே .. அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அப்போது அளித்த பேட்டியில், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக கூட்டணி என்பது இனி நடக்காது. 2024 லோக்சபா தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டோம். எங்கள் கூட்டணி மொத்தமாக முறிந்துவிட்டது, என்றார்.

Naam Tamilar vs BJP How Annamalai and Seeman fight creates new issue in Lok Sabha elections

இதனால் லோக்சபா தேர்தலில் அதிமுக - பாஜக இடையே கடுமையான வார்த்தை போர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அண்ணாமலை அங்கும் நேரடியாக எடப்பாடியை தாக்கி பேசவில்லை. எடப்பாடியும் அண்ணாமலையை தாக்கி பேசாமல் இருக்கிறார்.

மாறாக எதிர்பார்க்காத வண்ணம் நாம் தமிழர் - பாஜக இடையே கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டு உள்ளது. இரண்டு தரப்பும் மாறி மாறி மோதுகின்றன. முன்னதாக கரும்பு விவசாயி சின்னத்தை இழக்க பாஜகதான் காரணம் என்று சீமான் குற்றச்சாட்டு வைத்ததில் இருந்து மோதல் தொடங்கியது.

சின்னம் பிரச்சனை; சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. சீமான் கேட்டிருந்த கரும்பு சின்னம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் நாம் தமிழர் கட்சியினருக்கு சின்னம் தொடர்பாக பெரிய குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதி இருந்தார். அதேபோல் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து இருந்தார். இதற்கு பாஜகதான் காரணம் என்று சீமான் புகார் வைத்தது பெரிய பிரச்சனை ஆனது.

சீமான் அட்டாக்; அதன்பின் மதுரை லோக்சபா தொகுதியின் நாம் தமிழர் வேட்பாளர் சத்யா தேவியை ஆதரித்து சில நாட்களுக்கு முன்பு கோ.புதூரில் சீமான் பரப்புரை பொதுக் கூட்டம் நடத்தினார். அதில் பேசிய சீமான், அண்ணாமலை என்னுடைய ஸ்லீப்பர் செல். நான்தான் அவரை பாஜகவிற்கு அனுப்பியுள்ளேன். என் மண் என் மக்கள், வேல் யாத்திரை எல்லாம் நான் எடுத்த முன்னெடுப்புகள்தான். அதனால் மோடி, என் தம்பி அண்ணாமலை, எனக்கு (சீமான்) வேலை செய்கிறார் என்பதை கவனத்தில் வைத்து வேலை செய்யுங்கள்

அவர் மேலும் பேசுகையில் தாய் மீதும் தமிழ் மீதும் உறுதியாக சொல்கிறேன். பதவிக்காகவோ பணத்திற்காகவே வந்தவர்கள் அல்ல நாங்கள். மக்களுக்கு உழைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே வந்துள்ளோம். ஒரே ஒரு முறை எங்களை நம்பி வாக்களித்து பாருங்கள், என்று கூறினார்.

அண்ணாமலை: இதற்கு கோவை கவுண்டம்பாளையத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அதில், சீமான் அண்ணனுக்கு சின்னமும் இல்லை ஓட்டும் இல்லை. அதனால் அண்ணாமலை மீது சீமான் அண்ணன் உட்கார்ந்துவிட்டார்.

சீமானை பொருத்தமட்டில் இளைஞர்கள், பெண்கள், தாய்மார்கள் எந்த கட்சிக்கு வாக்களிக்க இருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். இன்று களத்தில் பாஜக தனித்து நிற்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி தனித்து நிற்கிறது. பிரதமராக மீண்டும் மோடி வர போகிறார் என்பது மக்களுக்கு மிகவும் நன்றாக தெரியும். ஆதரவெல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணிக்குத்தான். தன்மீது உள்ள தவறை மறைக்க பாஜக மீது குற்றம் சாட்டுகிறார் சீமான் என்று அண்ணாமலை பதில் அளித்தார்.

சீமான் பதிலடி: இதற்கு சீமான் அளித்த பதிலில், தம்பி அண்ணாமலை என்னுடைய தம்பி என்னுடைய ரத்தம் அவன் பேசுவதும் நான் பேசுவதும் ஒன்னு தான். தம்பி அண்ணாமலை நீ எடுத்திருக்கிறது வெறும் போலீஸ் TRAINING; நா எடுத்திருக்கிறது போராளி TRAINING என்று மயிலாப்பூரில் பரப்புரையின்போது நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி பதிலடி கொடுத்தார்.

இப்படி லோக்சபா தேர்தல் களத்தில் நாம் தமிழர் - பாஜக இடையே கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டு உள்ளது. சீமான் - அண்ணாமலை இடையே கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+