சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீமானின் ‘செல்லக் கோபம்’.. கூட்டணிக்கு ’டார்ச்’ அடிக்கும் கமல்ஹாசன்! திமுக கூட்டணியில் சேர ஆர்வமா?

Google Oneindia Tamil News

சென்னை : நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில் தற்போது தமிழகத்தில் கூட்டணி குறித்த பேச்சுகள் தீவிரமடைந்திருக்கிறது. இதுவரை கூட்டணியே அமைக்காத கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை கூட்டணி அமைக்குமா என பேச்சுக்கள் எழுந்து வருகிறது.

மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜக அதனை இன்னும் சிறிது காலத்தில் நிறைவு செய்ய இருக்கிறது. அதே நேரத்தில் ஹார்ட்ரிக் சாதனை செய்யவும் பாஜக தலைமை தீவிரம் காட்டி வருகிறது.

அதே நேரத்தில் இழந்த செல்வாக்கை பெறவும் பாஜகவிடமிருந்து இருமுறை ஆட்சியை தொடர்ந்து தட்டிப் பறித்த காங்கிரஸ், இம்முறை பாஜகவிடமிருந்து ஆட்சியை எப்படியாவது பெற்று கொள்ள வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறது.

 திமுக மீது செல்ல கோபம்தான்.. சீமான் திடீர் பல்டி! அப்ப 'அதை' கழற்றி காண்பிச்சது? வன்னி அரசு கேள்வி! திமுக மீது செல்ல கோபம்தான்.. சீமான் திடீர் பல்டி! அப்ப 'அதை' கழற்றி காண்பிச்சது? வன்னி அரசு கேள்வி!

பாஜக ஆட்சி

பாஜக ஆட்சி

இதற்காக இந்தியா முழுவதும் யாத்திரை மேற்கொண்டுள்ளார் அக்கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி. தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்தால் மட்டுமே இது சாத்தியம் எனக் கூறப்படும் நிலையில் மூன்றாவது அணி குறித்த பேச்சுகளும் அவ்வப்போது வெளி வருகின்றன. காங்கிரஸ் அல்லாது தமிழகத்தில் ஸ்டாலின், தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே என பாஜகவுக்கு எதிர் மனப்பான்மை கொண்ட பல்வேறு கட்சி தலைவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு தயாராகி வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல்

தமிழகத்திலும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் காணொளி காட்சி வாயிலாக உரையாடினார். இதேபோல அதிமுக, பாஜக, பாமக, காங்கிரஸ், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.

 அதிமுக கூட்டணி

அதிமுக கூட்டணி

அதிமுகவைப் பொறுத்தவரை தங்களது தலைமையில் தான் கூட்டணி என எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருக்கிறார். இதனை பாஜக தலைமை விரும்பவில்லை என கூறப்படுகிறது இதனால் பாஜகவை கழற்றிவிட்டு தேர்தலை சந்திக்கலாமா என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆலோசித்து வருகிறது. தற்போது அதிமுக பாமக பாஜக கூட்டணி ஓரளவு உறுதியாகி உள்ள நிலையில் தேர்தல் முடிவில் தான் இது குறித்து தெரிய வரும். மேலும் ஒரு தேசிய கட்சி அதிமுக கூட்டணியில் இணையலாம் எனக் கூறப்படுகிறது.

திமுக கூட்டணி

திமுக கூட்டணி

அதே நேரத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது ஒரு வேலை இந்த கூட்டணியில் மாற்றம் இருந்தாலும் இருக்கலாம். அல்லது இதே கூட்டணியோடு மேலும் சில கட்சிகளும் இணையலாம்.

 மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம்

இது ஒருபுறம் இருக்க நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை இதுவரை கூட்டணியில் சேர்ந்ததில்லை. பல தேர்தல்களில் தனித்து களம் கண்டு ஓரளவு வெற்றி பெற்ற தேமுதிக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் பாஜக கூட்டணியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேமுதிக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இதுவரை திமுக கூட்டணியில் சேர்ந்ததில்லை. தினகரன் திமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லாத நிலையில், பாஜக கூட்டணியே சாத்தியமாகவுள்ளது.

கூட்டணிக்கு வாய்ப்பு?

கூட்டணிக்கு வாய்ப்பு?

ஆனால் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் கூட்டணி குறித்து வெளிப்படையாக இதுவரை பேசவில்லை. பல தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு தோல்வியால் துவண்டு போய் இருக்கும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. ஆனால் திமுகவை பொருத்தவரை மென்மையான போக்கையே கையாண்டு வருகிறது. இதுவரை கூட்டணி பற்றி பேசி இருக்காத கமலஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிர்வாகி கூட்டத்தில் பேசிய போது கட்சியை பலப்படுத்துங்கள் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன் என பேசியதாக தகவல் வெளியாகின. இதனால் திமுக கூட்டணியில் நடிகர் கமலஹாசனின் கட்சி இணையலாம் என யூகங்கள் வெளியாகி இருக்கிறது.

நாம் தமிழர் சீமான்

நாம் தமிழர் சீமான்

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் கூட்டணி குறித்த தகவல்கள் தான் தற்போது அரசியல் களத்தில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடாத ஒரே கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி தான். அதே நேரத்தில் தொடர் தோல்விகளால் அந்தக் கட்சி துவண்டு போயிருக்கிறது. கடந்த சில நாட்களாக திமுகவை விமர்சிப்பதில் மென்மையான போக்கை நாம் தமிழர் கட்சி கையாண்டு வருவதாகவும். குறிப்பாக ஸ்டாலின் மீது இருப்பது 'செல்லக் கோபம்' என கூறியிருப்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடியது இல்லை. இதனால் ஒருவேளை கூட்டணி ஏற்படலாம் என்கின்றனர். ஆனால் நாம் தமிழர் திமுக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என அக்கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் இருக்கும் சில கட்சிகள் தொடர்ந்து திமுக கூட்டணியில் சேர வேண்டும் என ஆர்வம் காட்டி வருகின்றன. வரும் தேர்தல் பல ஆச்சரியங்களுக்கும் அதிரடிகளுக்கும் வழிவகுக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

English summary
With several months to go before the parliamentary elections, talks about alliances have intensified in Tamil Nadu. Kamal Haasan's makkal needhi mayyam and Seeman's Naam Tamilar Party, which have not yet formed an alliance, are being discussed as to whether they will form an alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X