சில நரிக் கூட்டத்தின் சதி முறியடிப்பு.. அனைத்து ஜாதியினரை அர்ச்சகராக்கி திமுக வெற்றி.. நாஞ்சில் சம்பத்
சென்னை: சில நரிக் கூட்டத்தின் சதியை முறியடித்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கி திமுக வெற்றி பெற்றுள்ளது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
Recommended Video
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டு கடந்த 14-ஆம் தேதியுடன் 100 நாட்கள் ஆகிறது. திமுக பொறுப்பேற்ற அன்று முதல் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை ஸ்டாலின் கொண்டு வந்துள்ளதாக கட்சியினர் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.
100 ஆவது நாளையொட்டி பல இடங்களில் திமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும், 100 நாட்களில் திமுக செய்த சாதனைகள் குறித்தும் வெளியிட்டு வருகிறார்கள்.

100 நாள் சாதனை
அந்த வகையில் திமுகவின் நூறு நாள் சாதனை குறித்து ராயபுரம் அறிவகத்தில் திமுக வர்த்தக அணி சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுகவின் நாஞ்சில் சம்பத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், யாரும் குற்றஞ்சாட்ட முடியாத ஆகாயத்தை போல் ஒரு பரிசுத்த ஆட்சியை ஸ்டாலின் தமிழக மக்களுக்கு தந்துகொண்டு இருக்கிறார். திமுகவின் நூறு நாள் சாதனை குறித்து தமிழகம் முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

விஷமத்தனமான பிரச்சாரம்
எதிரிகளின் திட்டமிட்ட விஷம் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் திமுக விஸ்வரூபம் எடுக்கும். உள்ளாட்சி தேர்தல்களில் நூறு சதவீதம் வெற்றி பெறும் வகையில் திமுக தயார்படுத்தி கொண்டு உள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பது தான் மனித நியதி.

சில காலம்
ஆனால் இதை எதிர்த்து சில நரிகூட்டம் சில காலம் வெற்றி பெற்று இருந்தது ஆனால் அந்த நரி கூட்டத்தின் சதியை முறியடித்து திமுக வெற்றி பெற்று உள்ளது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை கருணாநிதி முதல்வராக இருந்த போது அறிவித்திருந்தார். அதை தற்போது திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.

பழைய அர்ச்சகர்கள்
இந்த திட்டம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. ஒரு சாரார் இந்த திட்டத்தை பாராட்டியும் இன்னொரு சாரார் இதை எதிர்த்தும் வருகிறார்கள். புதிய அர்ச்சகர்கள் 58 பேரை நியமித்ததன் மூலம் பழைய அர்ச்சகர்களை பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்ற ஒரு விவாதம் எழுந்தது. இதற்கு இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார். அதில் பழைய அர்ச்சகர்கள் யாரையும் வெளியேற்றும் எண்ணம் இல்லை. தவறாக சிலர் அவதூறுகளை பரப்பி வருகிறார்கள் என்றார் நாஞ்சில் சம்பத்.

ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம்
மேலும் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினும் சட்டசபையில் விளக்கமளித்தார். அதில் பழைய அர்ச்சகர்களை வெளியேற்றும் திட்டம் ஏதும் இல்லை. அவர்கள் அப்படியே அந்தந்த கோயில்களில் பணியாற்றி வருகிறார்கள். சமூக நீதியை சீர்குலைக்க சிலர் இதுபோல் சொல்லி வருகிறார்கள் என சட்டசபையில் விளக்கமளித்திருந்தார். இந்த திட்டத்தை எதிர்த்து ஹைகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. இதை தள்ளுபடி செய்ய தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications