சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நாராயணா நாராயணா".. தப்பாட்டம்.. தம்பட்டம்.. குத்தாட்டம்.. கி.வீரமணியை கிண்டிலடிக்கும் பாஜக

கி வீரமணியை கேள்வி கேட்டு பாஜகவின் திருப்பதி நாராயணன் ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: பட்டினப்பிரவேசம் விவகாரம் இன்னும் அடங்கியபாடில்லை.. திராவிடர் கழக தலைவர் வீரமணியை வம்பிழுத்து, பாஜகவின் திருப்பதி நாராயணன் ஒரு கேள்வி கேட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு அரசுக்கு எதிராக கடுமையான விமர்சித்து மதுரை ஆதீனம் பேசியிருந்தார்..

அதை தொடர்ந்து ஆளுங்கட்சியினரால் தன்னுடைய உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், இது குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கவிருப்பதாகவும் ஆதீனம் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

”பிரதமர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் மோடி” ஸ்லிப் ஆன அசாம் முதலமைச்சர் நாக்கு - கலாய்க்கும் காங்கிரஸ்”பிரதமர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் மோடி” ஸ்லிப் ஆன அசாம் முதலமைச்சர் நாக்கு - கலாய்க்கும் காங்கிரஸ்

 பிரவேசம்

பிரவேசம்

இதனிடையே, பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை அரசு நீக்கி உத்தரவிட்டது.. இந்த உத்தரவை பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் வெற்றியாக கொண்டாடினர்.. இதுகுறித்து ஆதீனமும் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "பட்டினப்பிரவேச தடை நீக்கப்பட்டதை வரவேற்கிறேன். இதை முன்னாடியே, சமய தலைவர்களுடன் சுமுகமாக பேசி தீர்த்திருக்கலாம்.. திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு வாழ்த்துக்கள். அவர் இவ்விஷயத்தை ஆரம்பிக்காமல் விட்டிருந்தால், பட்டினப்பிரவேசம் என்றால் என்ன என்பதே யாருக்கும் தெரிந்திருக்காது.. ஆனால், இன்றோ உலகத்திற்கே தெரிந்து விட்டது" என்று கூறியிருந்தார்.

 திடீர் அனுமதி

திடீர் அனுமதி

திமுக அரசு பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி தந்தது பல்வேறு விமர்சனங்களையும், விவாதங்களையும் உள்ளடக்கி வருகிறது.. ஒரு வாரம் முழுக்க எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, கண்டனங்களையும் தெரிவித்துவிட்டு, எதற்காக திமுக அரசு திடீரென அனுமதி தர வேண்டும், பாஜகவுக்கு திமுக பயந்துவிட்டதா? பின்வாங்கிவிட்டதா? ஏன் இப்படி பணிந்துவிட்டது? என்ற கேள்விகள் எல்லாம் எழுந்தன.

 ஸ்டாலின் சபாஷ்

ஸ்டாலின் சபாஷ்

மறுபக்கம், தமிழக அரசு என்பது அனைவருக்கும் பொதுவான அரசு.. முதல்வர் ஸ்டாலின் அனைத்து தரப்பினருக்கும், அவர்தான் முதல்வர்.. அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து செல்வதே ஒரு முதல்வரின் கடமை.. அதைதான் முதல்வர் சரியாக செய்திருக்கிறார்.. இந்த அணுகுமுறை சரியே என்று மற்றொரு தரப்பினர் வரவேற்று வருகின்றனர்.. எனினும், பாஜக தரப்பு இதை, தங்களுக்கான வெற்றியாக கருதி வருகிறது..

 நாராயணன் கேள்வி

நாராயணன் கேள்வி

ஸ்டாலினுக்கு நன்றி சொல்லிய கையோடு, வீரமணியை விமர்சிக்கவும் ஆரம்பித்துவிட்டது.. ஏற்கனவே, மதுரை ஆதீனம், வீரமணிக்கு நன்றி என்று சொல்லி கிண்டலடித்திருந்தார்.. இப்போது தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, இன்னொரு கேள்வியை வீரமணியிடமே கேட்டு ட்வீட் பதிவிட்டள்ளார்.. அதில், "திமுக அரசு சிலரை திருப்தி செய்வதற்காக அளவுக்கு அதிகமாக ஆன்மீகம், ஆன்மீகம் என்று தம்பட்டம் அடிக்க வேண்டுமா?: கி.வீரமணி, தப்பாட்டம்' ஆடினால் 'தம்பட்டம்' அடித்து தான் தீர வேண்டும். அதற்கு 'குத்தாட்டம்' ஏனோ?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

English summary
narayanan tirupati criticizes dk leader k veeramani and tweeted about him மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கும் என்று மதுரை ஆதீனம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X