சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிரட்டும் மாண்டஸ் புயல்.. 6 தமிழக மாவட்டங்களுக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு படை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறுகிறது.

மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறும் நிலையில் டிசம்பர் 8 ஆம் தேதி இது புயலாகவும் தீவிரமடைகிறது. இதற்கு மாண்டஸ் என பெயரிடப்படுகிறது. இந்த பெயரை ஐக்கிய அரபு நாடுகள் பரிந்துரைத்துள்ளது.

National Rescue force to be deployed in 6 districts mandous cyclone heavy rain lashes

இந்த புயல் மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வட தமிழக கடலோரம் அருகே வரும் என எதிர்பார்க்கப்படுதிறது. இதற்காக வடதமிழக கடலோரத்தில் உள்ள மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது. சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் இன்று விரைந்துள்ளனர். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. இவர்கள் புயல் , வெள்ள காலத்தில் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்டெடுப்பர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அர்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மேலாண்மை மையத்தில் இருந்து ஆறு மாவட்டங்களுக்கு தலா 25 பேர் கொண்ட மீட்பு குழு வீரர்கள் வாகனங்கள் மூலமாக புறப்பட்டுச் சென்றுள்ளனர். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக் கூடாது என்றும் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாண்டஸ் புயல் புதுச்சேரி அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா தலைமையில் இன்று காலை 10 மணிக்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

மாண்டஸ் புயல்: டிசம்பர் 8ஆம் தேதி அதி கனமழை.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை மையம் வார்னிங் மாண்டஸ் புயல்: டிசம்பர் 8ஆம் தேதி அதி கனமழை.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை மையம் வார்னிங்

English summary
National Rescue force deployed in 6 districts of Tamilnadu as Mandous Cyclone is predicted and it gives more rains.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X