‛கொண்டல் மேகம்’.. கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் பாகம் 2ன் அசத்தலான மூன்றாம் பாடல் அறிமுகம்
சென்னை: கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் பருவம் 2 பாட்டுத்தொடர் ஏப்ரல் 17 ல் துவங்கியது. இந்த தொடரின் 3ம் பாடலாக ‛கொண்டல் மேகம்' வெளியாக உள்ளது. வைரமுத்துவின் வரிகளில் சைமன் கே கிங்கின் இசையில் ஷங்கர் மகாதேவன் குரலில் பரதன் இயக்கத்தில் பாடல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் சிறந்த கவிஞர், பாடலாசிரியராக திகழ்பவர் தான் கவிப்பேரரசு வைரமுத்து. இவர் நாட்படு தேறல் என்ற பெயரில் வாரம் ஒரு பாடல் வீதம் 100 பாடல்கள் உருவாக்கி வெளியிட முடிவு செய்தார். இதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்தார்.
அதன்படி 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்களுடன் கவிப்பேரரசு வைரமுத்துவின் 100 பாடல்கள் வெளிவர உள்ளது. நாட்படு தேறல் ஒன்று பாட்டுத்தொடர் முடிவடைந்த நிலையில் நாட்படு தேறல் 2 பாட்டுத்தொடர் பணிகள் நடந்து வந்தன. இந்த நாட்படு தேறல் பருவம் 2க்கான பாட்டுத்தொடர் ஏப்ரல் 17 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் கலைஞர், இசையருவி சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது.

3ம் பாடல் அறிமுகம்
ஏப்ரல் 17 ல் முதல் பாடல் வெளியானது. இந்த வரிசையில் 3ம் பாடல் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாக உள்ளது. ‛கொண்டல் மேகம்' எனும் தலைப்பில் இந்த வைரமுத்து எழுதியுள்ள இந்த பாடல் வரிகளுக்கு சைமன் கே கிங் இசையமைத்துள்ளார். பாடலை ஷங்கர் மகாதேவன் பாடியுள்ளார். பாடலை இயக்குனர் பரதன் இயக்கியுள்ளார்.

3வது பாடல் வரிகள்
இதுகுறித்து வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த பாடல் வரிகளையும் அவர் பதிவிட்டுள்ளார்.
பாதாதி கேசம் கடவுளுக்கு
கேசாதி பாதம் கன்னிகைக்கு
கேசாதி பாதத்தில் வர்ணிக்கிறேன் - ஏன்
கிளியாளைத் தமிழ்கொண்டு பூசிக்கிறேன்
கொண்டல் மேகமொன்று
கொண்டை ஏறிநின்று
கொண்டுலாவும் குழுலாள் - பிறை
கொண்டு வார்த்த நுதலாள் - வெள்ளிக்
கெண்டை மீன்கள் ரெண்டு
முண்டித் தாவிவந்து
சண்டை போடும் விழியாள் - என்
ரெண்டு கண்ணில் அழியாள்
எள்ளின் பூவிலொன்று
துள்ளி நீண்டதென்று
சொல்லும் நாசியுடையாள் - நம்மை
வெல்லும் ராசியுடையாள் - மெல்லக்
கொள்ளை கொள்ளை கொண்டு
அள்ளித் தின்னுமென்னும்
பிள்ளை பிள்ளை இதழாள் - அதில்
கள்ளை கொஞ்சம் கசிவாள்
சங்கும் பொன்விளைந்த
நுங்கும் வந்துவந்து
பங்கு கேட்கும் கழுத்தாள் - அதில்
பொங்கும் மஞ்சள் குழைத்தாள் - அவை
தங்கள் பாகமென்று
தங்கப் பாளம்ரெண்டு
தங்கும் தோள்கள் படைத்தாள் - என்னைத்
தங்கிப் போக அழைத்தாள்
ஒன்றுபோல் வளர்ந்த
ரெண்டு தேர்க்குடங்கள்
நின்றுநீளும் தனத்தாள் -கர்வம்
கொன்றுபோகும் குணத்தாள் - முடி
கொண்ட ஆலிலைபோல்
மின்னும் மேல்வயிற்றில்
வண்ணம் மேலும் வளர்த்தாள் - தங்கக்
கிண்ணம் மூடி முடித்தாள்
முல்லைப் பூங்கொடிக்குப்
பிள்ளைபோல் பிறந்தே
இல்லை என்னும் இடையாள் - அதில்
தொல்லை செய்யும் உடையாள் - நல்ல
வெள்ளைத் தந்தம் ரெண்டு
வெள்ளிப் பூண்பிடித்துச்
சொல்லிச் செய்த தொடையாள் - செவ்
வல்லிப் பூவின் அடியாள்
என இந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன.

2வது பாடலுக்கு பாராட்டு
முன்னதாக நாட்படு தேறல் 2ம் பாகத்தின் 2வது பாடலாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மகன் மீதான தாய்ப்பாசம் குறித்த ‛ஆயிரம் தான் கவிசொன்னேன்' எனும் பாடல் வெளியானது. இந்த பாடலை மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடிய நிலையில் இனியவன் இசையமைத்துள்ளார். பாடலை இயக்குனர் காந்தி கிருஷ்ணா இயக்கியிருந்தார்.இந்த பாடலுக்கு அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர்.

பாடல்கள் என்னென்ன
இந்த நாட்படு தேறல் பாகம் 2ல் ரோஜாவே தமிழ் பேசு..., அன்னம்மா பெத்தவளே ஆடு மேய்க்க போனவளே அந்தி மசங்கும் முன்னே ஆட வந்த மாயம் என்ன..., கனா கண்டேன்.., என்னைக்கு பொண்டாட்டி என்னை விட்டு போனாலே அன்னைக்கே என்படுக்கை திண்ணைக்கு வந்திடுச்சி..., ஆயிரம் தான் கவி சொன்னேன் அழகழகா பொய் சொன்னேன்... ஒவ்வொரு நாளும் உலகை திறக்கும் உதய கதிரே வணக்கம்.., கூந்தல் மேகம் ஒன்று கொண்டை ஏறி நின்று என பாடல்கள் அமைந்துள்ளன. இந்த பாடல்களில் தாய்ப்பாசம், காதல், மனைவியின் பிரிவு உள்பட பல்வேறு கருப்பொருட்களுடன் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலாக தற்போது வெளியிடப்பட்டு வருகிறது.

இயக்குனர்கள் யார் யார்
முன்னதாக இந்த நாட்படுத்தேறல் 2ம் பருவத்தை பொறுத்தமட்டில் ஏற்கனவே பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பாடல் காட்சிகளை இயக்குனர் சிம்புதேவன், ‛மதயானைக்கூட்டம்' விக்ரம் சுகுமாறன், ‛பைரவா' பரதன், ‛சிட்டிசன்' சரவண சுப்பையா, ‛க/பெ ரண சிங்கம்' விருமாண்டி, இயக்குனர் தளபதி பிரபு, ரமேஷ் தமிழ்மணி, சரண், காந்தி கிருஷ்ணா, நடன இயக்குனர் ராதிகா, தேன்கணேஷ் விநாயகன், ‛காக்கா முட்டை' மணிகண்டன் ஆகியோர் இயக்கி உள்ளனர்.
இசையமைப்பாளர்கள் யார் யார்
பாடல்களுக்கு இசையமைப்பாளர்களாக வித்யாசாகர், யுவன் சங்கர்ராஜா, ஜிவி பிரகாஷ், ரமேஷ் விநாயகம், அனில் சீனிவாசன், சைமன் கே கிங், நவ்பல் ராஜா, அவ்கத், ரமேஷ் தமிழ்மணி, ஜெரார்ட் பெலிக்ஸ், வாகு மசான், இனியவன் உள்ளிட்டோர் இசையமைத்துள்ளனர். மேலும் எஸ்பி பாலசுப்பிரமணியம், சங்கர் மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, ஹரிணி, கல்பனா, வைக்கம் விஜயலட்சுமி, விஜய் யேசுதாஸ், ஹரிசரண், பென்னிதயாள் உள்ளிட்டவர்கள் பாடல்களை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications