நீட் 2021 தேர்வு முடிவுகள் வெளியானது.. மூன்று பேர் 720க்கும் 720 எடுத்து சாதனை! விவரம்
சென்னை : எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் 720க்கு 720 மார்க் பெற்று 3 பேர் தேசிய அளவில் டாப் இடம் பிடித்தனர். ஹைதராபாத், டெல்லி, மும்பை ஆகிய நகரங்களைச் சேர்ந்த 3 பேர் 720க்கு 720 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் எம்.பிரவீன், நாமக்கல் தும்மங்குறிச்சியைச் சேர்ந்த மாணவி எஸ்.ஏ.கீதாஞ்சலி ஆகியோர் 710 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
கொரோனா காரணமாக பிளஸ் 2 தேர்வுகள் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. எனினும் இளநிலை மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று மத்தியஅரசு திட்டவட்டமாக அறிவித்தது. கடந்த ஜூலை மாதம் நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இதை தொடர்ந்து இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 12-ந் தேதி நடைபெற்றது.

வழக்கு
நாடு முழுவதும் உள்ள 202 நகரங்களில் 3,682 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை சுமார் 16.14 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதில், மகாராஷ்டிராவில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் இரண்டு மாணவர்களின் வினாத்தாள்கள், ஓ.எம்.ஆர். தாள்கள் மாறியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டது.

நீட் முடிவுகள்
இதையடுத்து, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட மும்பை உயர்நீதிமன்ற தடை விதித்தது. இதனால் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் நீட் முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. நீட் தேர்வுகளைமாணவர்கள் https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.

3 பேர் நீட் தேர்வில் முதலிடம்
இந்நிலையில்நீட் தேர்வில் ஹைதராபாத், டெல்லி, மும்பை ஆகிய நகரங்களைச் சேர்ந்த 3 பேர் 720க்கு 720 மதிப்பெண் எடுத்துள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த மிருணாள் குட்டேரி 2021 நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய ரேங்க் 1 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். மறுபுறம், டெல்லியைச் சேர்ந்த தன்மய் குப்தா 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 2 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த கார்த்திகா ஜி நாயர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய தரவரிசையில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். நீட் தேர்வில் அகில இந்திய ரேங்க் 5 வது இடத்தை ஆக்ராவைச் சேர்ந்த நிகர் பன்சால் 715 மதிப்பெண்களுடன் பெற்றுள்ளார்.

நீட் முதலிடம் தமிழகம்
தமிழகத்தில் நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் எம்.பிரவீன், நாமக்கல் தும்மங்குறிச்சியைச் சேர்ந்த மாணவி எஸ்.ஏ.கீதாஞ்சலி ஆகியோர் 710 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.சேலத்தைச் சேர்ந்த மாணவி அர்ஜிதா 705 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். அகில இந்திய அளவில் கீதாஞ்சலி 23-வது இடத்தையும், பிரவீன் 30-வது இடத்தையும், அர்ஜிதா 60-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் நாமக்கல் அருகே பயிற்சி மையத்தில் ஓராண்டு படித்தவர்கள் ஆவார். நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மெரிட் லிஸ்ட தயாரிக்கப்பட்டு கவுன்சிலிங் செயல்முறை அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications