நீட் விலக்கு.. மத்திய அரசின் 16 கேள்விகளுக்கு தமிழக அரசு பதில்..முன்னேற்றம் வரும் - மா.சுப்ரமணியன்
சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து பதில் அனுப்பி உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். நீட் விவகாரத்தில் முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்ப்போம் எனவும் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு பகுதியில் பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மக்களைத் தேடி மருத்துவம் கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வர் துவங்கி வைத்தார். அரசு மருத்துவம் அனைவருக்கும் போய் சேர வேண்டும் என்ற நோக்கில் துவங்கியது. அந்தத் திட்டம் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்தத் திட்டத்தை பொறுத்தவரை கடந்த ஓர் ஆண்டில் தமிழகத்தில், 74.92% பேருக்கு பரிசோதனையும், 83,23,723 பேருக்கு மருந்து பெட்டகமும் வழங்கப்பட்டு உள்ளது. 1,56,57,595 மருந்து பெட்டிகள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 83,73,724 மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி மருந்து காலியாகி விட்ட நபருக்கு ரிபீட்டட் சேவை முறையில் வழக்கப்பட்டு உள்ளது.
நோயாளிகளின் உடம்பில் உள்ள குறைபாடுகள் பற்றி அறிந்துகொள்ள சுகாதார குடும்ப புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழகம் முழுவதும் மருத்துவ குடும்ப அட்டை வழங்க இருக்கிறோம். இந்தத் திட்டத்தை பொறுத்தவரை சென்னையில் கால தாமதாம் ஆகினாலும் 15,75,400 பேர் பரிசோதனையில் உட்படுத்த உள்ளனர்.
இந்தத் திட்டத்தின் பயன் முக்கியமாக மலைவாழ் மக்களுக்கு முதலில் கொண்டு செல்லும் நோக்கில் இந்தத் திட்டம் சென்னையில் தாமதமாக ஆகியுள்ளது. கிராமப்புற மக்களின் மருத்துவம் பார்க்க இந்தத் திட்டம் மூலம் 10 ஆயிரம் செவிலியர்கள் மேல் உள்ளனர். 19,535 பேர் இந்தத் திட்டத்திற்கு முழுவதுமாக செயல்பட்டு வருகிறோம். இன்னும் 2 ஆயிரம் பேரை இந்தத் திட்டதிற்கக்காக தேசிய சுகாதார திட்டம் நியமிக்க உள்ளது.
நீட் விலக்கில் தமிழகம் தான் தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது. நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து பதில் அனுப்பி உள்ளோம். நீட் விலக்கில் முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்ப்போம் என்று கூறினார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கேட்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு மத்தியஅரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர், நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்ததுடன், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஏற்கனவே செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு தகுதியின் அடிப்படையிலான தேர்வு என்று கூறியிருப்பதுடன், இது தேசியக் கல்விக் கொள்கைக்கு முரணாக உள்ளதா என கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. நீட் விலக்கு மசோதா மத்திய அரசின் வரம்பிற்குள் வந்துள்ளதா அல்லது மாநிலஅரசின் வரம்பிற்குள் வந்துள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்களை மத்தியஅரசின் சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் ஆகிய 2 துறைகள் கேள்வி எழுப்பி உள்ளது அதற்கு பதில் அளிக்க உள்ளதாகவும், நீட் விலக்கு பெறுவதற்கு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி முதல்வர் ஒப்புதலுக்கு பிறகு மத்திய அரசுக்கு விரைவில் தமிழக அரசின் பதில் கடிதம் அனுப்பப்படும் என கூறினார்.
இந்த நிலையில், நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து பதில் அனுப்பி உள்ளோம் என்றும், நீட் விவகாரத்தில் முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications