சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீட் மரணங்கள்... மத்திய மாநில அரசுகள்... இணைந்து நடத்தும் கொலைகள்... கனிமொழி பதிவு!!

Google Oneindia Tamil News

சென்னை: நீட் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல. மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே என்று திமுக எம்பி கனிமொழி பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து கனிமொழி எம்பி இன்று தனது ட்விட்டர் பதிவில், ''நீட் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல. மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே. காவல்துறை அதிகாரி முருகசுந்தரத்தின் மகள் ஜோதி துர்கா, நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மாணவர்கள் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது.

NEET suicides in Tamil Nadu is planned murder by central and state govt says Kanimozhi MP

கடந்த வாரம், தேனியை சேர்ந்த விக்கிரபாண்டி, உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நித்யஶ்ரீ ஆகியோர் ஆன்லைன் வகுப்புகளை கையாள முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதே வாரத்தில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம் ?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் நாளை மருத்துவத்துக்கான நீட் தேர்வு நடக்கவிருக்கும் நிலையில் தமிழகத்தில் இதுவரை மூவர் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து, நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மாணவர்கள் எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் - ஓபிஎஸ் மாணவர்கள் எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் - ஓபிஎஸ்

English summary
NEET suicides in Tamil Nadu is planned murder by central and state govt says Kanimozhi MP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X