சமபந்தி விருந்தில் ஒதுக்கிறார்கள்.. கண்ணீர்விட்ட நரிக்குறவ பெண்...தன்னுடன் அமர வைத்து உணவுண்ட அமைச்சர்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பிரசித்தி பெற்ற இந்து கோவில்களில் தமிழக அரசு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தலசயனப் பெருமாள் கோயிலில் மதிய அன்னதானம் அரசால் வழங்கப்படுகிறது,
சமீபத்தில் இதில் கலந்துகொள்ள சென்ற நரிக்குறவ பெண்ணான அஸ்வினி என்பவரை கோயில் ஊழியர்கள் தரக்குறைவாக பேசி சாப்பிட விடாமல் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

நரிக்குறவ பெண்ணுக்கு அவமதிப்பு
அந்தப் பெண் தனக்கு நேர்ந்த அவமானத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். தமிழக அரசு சமத்துவம் மிக்க திட்டங்களை கொண்டு வருவதாகவும், ஆனால் அதிகாரிகள் இதனை அவமதிக்கும் வகையில் செயல்படுவதாகவும் அவர் பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவித்தனர்.

அமைச்சர் சேகர்பாபு செய்த செயல்
இந்த நிலையில் இன்று தலசயனப் பெருமாள் கோயிலில் அனைவருக்கும் சமபந்தி விருந்து அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, நரிக்குறவர்களுடன் அமர்ந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார். அப்போது கோவில் ஊழியர்கள் தரக்குறைவாக பேசி அவமதிப்புக்கு உள்ளான நரிக்குறவ பெண்ணான அஸ்வினியை அழைத்த அமைச்சர் சேகர்பாபு தனது அருகில் அழைத்தார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை
''அன்னதானம் என்பது அனைவருக்கும் சமமானது. வாருங்கள் என் அருகில் அமர்ந்து சாப்பிடுங்கள்'' என்று அமைச்சர் சேகர்பாபு அந்த பெண்ணிடம் கூறினார். தொடர்ந்து அந்த பெண்ணுடன் அமர்ந்து அவர் உணவு சாப்பிட்டார். இதனை தொடர்ந்து இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அனைவருக்கும் இலவச வேட்டி சேலைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நரிக்குறவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் சேகர்பாபு ஆலயத்தை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்
நரிக்குறவர் பெண்ணை தனது அருகில் அமர வைத்து சாப்பிட்ட அமைச்சர் சேகர்பாபுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்தனர். சமூக நீதியை வெறும் பேச்சோடு மட்டும் நிறுத்தி விடாமல் அதனை தி.மு.க அரசு ரியலாகவும் செய்து வருகிறது என்று அவர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். நரிக்குறவர்களுடன் அமர்ந்து அமைச்சர் சேகர் பாபு உணவு உண்ணும் காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!












Click it and Unblock the Notifications