அதிமுகவுடன் அமமுக இணைக்கப்படுமா? டிடிவி தினகரன் சொல்வதை பாருங்க!
எக்காலத்திலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை, அதிமுகவுடன் இணைக்க மாட்டேன் என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: எக்காலத்திலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை, அதிமுகவுடன் இணைக்க மாட்டேன் என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக இந்த லோக் சபா தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்பதுதான் பெரிய கேள்வியாக மாறியுள்ளது. வரும் லோக் சபா தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுமா என்று கேள்வி உருவாகி உள்ளது.
அதேசமயம், அதிமுகவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைக்கப்படுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

ராம்தாஸ் அத்வாலே கருத்து
நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி அமைவது உறுதி. ஜெயலலிதா கனவுகளை நிறைவேற்ற டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணைய வேண்டும். அதிமுகவுடன் இணைய வேண்டும் என தினகரனை சந்தித்து வலியுறுத்த உள்ளேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

டிடிவி தினகரன் பதில்
இந்த நிலையில் ராம்தாஸ் அத்வாலே கருத்து குறித்து தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நாங்கள் எப்போதும் அதிமுகவுடன் சேர மாட்டோம். அதிமுக ஒரு துரோக கட்சி. அந்த கட்சியுடன் நாங்கள் ஏன் அமமுகவை இணைக்க வேண்டும். ஜெயலலிதாவின் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறது அதிமுக அரசு. ராம்தாஸ் அத்வாலே சொல்வதை எல்லாம் பெரிய கருத்தாக எடுத்துக்கொள்ள கூடாது.

அமமுக வலிமை
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மிகவும் வலுவாக இருக்கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நாங்கள் நிர்வாகிகளை நியமித்து இருக்கிறது. எங்கள் கட்சி தனியாகவே வலுவான கட்சி. அதிமுக, திமுக போன்ற கட்சிகள்தான் எங்களை பார்த்து பயப்பட வேண்டும்.

தம்பிதுரை எப்படி
பாஜகவிற்கு எதிராக தம்பிதுரை பேசுவது எல்லாம் நாடகம். அவர் உண்மையில் பாஜகவிற்கு எதிராக பேசவில்லை. முதல்வர் பழனிச்சாமி சொல்லித்தான் தம்பிதுரை இப்படி பேசி வருகிறார். இது மக்கள் எல்லோருக்கும் தெரியும், என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications