1 - 5 ஆம் வகுப்புகளுக்கு புது சிலபஸ்.. ஜன.5 வரை கருத்து தெரிவிக்கலாம்.. பள்ளிக் கல்வி துறை அறிவிப்பு
சென்னை: தமிழகத்தின் பள்ளிக் கல்விக்காக புதிதாக மாநிலக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தமிழகத்தில் பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தின் வரைவு உருவாக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் (ஜனவரி 6) கருத்து தெரிவிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையின்படி 1 முதல் 12 வகுப்பு வரை தற்போதுள்ள சிலபஸ் மாற்றப்பட்டு புதிய பாடத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமையில் உயா்நிலைக் குழுவும், சுற்றுச்சூழல் விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவில் பல்வேறு துறை சாா்ந்த வல்லுநா்கள் இடம் பெற்றுள்ளனா். இந்தக் குழுவினரின் சாா்பில் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு பல்வேறு தரப்பினரின் கருத்துகள் பெறப்பட்டன. இதைதொடா்ந்து, குழுவினரின் வழிகாட்டுதலின் பேரில் முதல் கட்டமாக 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட வரைவு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளின் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சூழ்நிலையியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பாடத் திட்டங்களை கல்வியாளா்கள், பொதுமக்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் https://tnschools.gov.in இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை முதல் (ஜன. 6) பாா்வையிடலாம்.
மேலும், பாடத்திட்டம் சாா்ந்து கருத்து கூறுவோா், மேற்கண்ட இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணையவழிப் படிவம் (online form) வாயிலாக, சுய விவரங்களுடன் தங்களது கருத்துகளை ஜனவரி 25-ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications