ட்விஸ்ட்.. முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை? “சிபிசிஐடி விசாரணை”- டிஜிபியிடம் புகார் அளித்த தம்பி மனைவி!
சென்னை : முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி ஆதம்பாஷா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மஸ்தானின் தம்பி மனைவி டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். மரணமடைந்த முன்னாள் எம்.பி மஸ்தானுக்கும், எனது கணவர் ஆதம் பாஷாவுக்கும் எப்போதும் கருத்து வேறுபாடு இருந்ததில்லை என்றும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
மஸ்தான் குடும்பத்தினர் தேவையில்லாமல் தனது கணவர் ஆதம் பாஷா மற்றும் எனது மருமகன் இம்ரான் ஆகியோரை சம்பந்தப்படுத்தி புகார் கொடுத்துள்ளனர் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மஸ்தான் கொலை வழக்கை உடனே சிபிசிஐடி புலனாய்வு துறை விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். எனது கணவர் ஆதம் பாஷா மற்றும் எனது மருமகன் இம்ரான் ஆகியோரை விடுவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மஸ்தான் மரணம்
கடந்த டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி இரவு தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் துணை தலைவரும், முன்னாள் எம்.பியுமான மஸ்தான் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது. மஸ்தானின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் அளித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவத்தன்று மஸ்தானுடன் காரில் சென்ற உறவினர் இம்ரான் பாஷாவிடம் விசாரித்தனர்.

கொலை
அதில், இம்ரான், முன்னாள் எம்.பி மஸ்தானிடம் 15 லட்சம் வரை கடனாக பெற்றதும், அதனை மஸ்தான் திரும்ப கேட்டு வந்ததால் தனது நண்பர்களுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி மஸ்தானை தனியாக காரில் அழைத்துச் சென்று மூச்சுத் திணறவைத்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இம்ரான் பாஷா மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இம்ரான் பாஷாவின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தபோது மஸ்தானை கொலை செய்வதற்கு முன்னும் பின்னும் இம்ரான் பாஷா தனது மாமனாரும், மஸ்தானின் சகோதரருமான கௌசே ஆதம்பாஷாவுடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.

சகோதரர் கைது
இதுகுறித்து இம்ரான் பாஷாவிடம் விசாரித்ததில், கொலை செய்யப்பட்ட மஸ்தானுக்கும் அவருடைய தம்பி ஆதம்பாஷாவிற்கும் குடும்பச் சொத்து சம்பந்தமாக ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்ததும், இம்ரான் பாஷாவுடன் கூட்டு சேர்ந்து அண்ணனை கொலை செய்ய ஆதம்பாஷா உடந்தையாக இருந்ததாக போலீசார் இதையடுத்து மஸ்தான் கொலை வழக்கில் 6-வது நபராக அவரது சகோதரர் ஆதம்பாஷாவை போலீசார் கைது செய்தனர். மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி ஆதம்பாஷா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆதம்பாஷாவின் மனைவி டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

தம்பி மனைவி புகார்
தனது கணவர் மற்றும் மருமகன் உள்ளிட்டோரை பொய் குற்றச்சாட்டுகளின் பேரில் போலீசார் கைது செய்துள்ளதாக மஸ்தானின் தம்பி ஆதம்பாஷாவின் மனைவி ஜூனத் பேகம் டிஜிபியிடம் புகார் தெரிவித்துள்ளார். அதில், "எனது கணவர் ஆதம்பாஷா பெரியபாளையத்தில் எஸ்.எஸ்.கிளினிக்கில் மேற்பார்வையாளராக இருக்கிறார். எனது மகள் ஷாஹீனாவை இம்ரான் பாஷா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளோம். எனது கணவர் ஆதம் பாஷாவின் மூத்த சகோதரர் தான் முன்னாள் எம்.பி மஸ்தான். சமீபத்தில் மஸ்தான் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி வந்தது.

மருமகன்
மஸ்தானின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் வந்திருந்த போது மஸ்தானின் மனைவி மற்றும் மகன், முதல்வரிடம் மஸ்தான் கொலை செய்யப்பட்டு உள்ளார், அவரது தம்பி ஆதம் பாஷா மற்றும் அவரது மருமகன் இம்ரான் தான் இந்த கொலையைச் செய்தனர் எனக் கூறியுள்ளனர். மஸ்தான் மற்றும் குடும்பத்தார் முதல்வரிடம் சொன்ன குற்றச்சாட்டு அடிப்படையில் கூடுவாஞ்சேரி காவல்துறையினர் எனது மருமகன் இம்ரான் உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சொத்துக்காக கொலை
எனது மருமகன் இம்ரான் 15 லட்சம் ரூபாய் முன்னாள் எம்.பி மஸ்தானிடம் இருந்து கடனாக வாங்கி இருந்தார். அந்த பணத்தை மஸ்தான் திரும்பி கேட்டதால் தனது நண்பர்களை வைத்து கொலை செய்தனர் என தகவல் பரவியது. இந்நிலையில் நேற்று எனது கணவர் ஆதம் பாஷாவை கூடுவாஞ்சேரி காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்று தனது சகோதரர் மஸ்தானை மருமகன் இம்ரானை வைத்து சொத்துக்காக கொலை செய்ததாக கூறி கைது செய்துள்ளனர். ஏற்கனவே மருமகன் இம்ரான் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் சூழ்நிலையில், எனது கணவர் ஆசம் பாஷாவையும் கைது செய்துள்ளனர்.

சிபிசிஐடி விசாரணை வேண்டும்
மரணம் அடைந்த முன்னாள் எம்.பி மஸ்தான்க்கும், எனது கணவர் ஆதம் பாஷாவுக்கும் எந்த நேரத்திலும் கருத்து வேறுபாடு எதுவும் இருந்ததில்லை. அவரது மரணத்திற்குப் மஸ்தான் குடும்பத்தினர் தேவையில்லாமல் எனது கணவர் ஆதம் பாஷா மற்றும் எனது மருமகன் இம்ரான் ஆகியோரை சம்பந்தப்படுத்தி புகார் கொடுத்து, அதன்படியே காவல்துறை நடந்து கொள்வதாக நான் நினைக்கிறேன். எனவே இந்த வழக்கை உடனே சிபிசிஐடி புலனாய்வு துறைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். எனது கணவர் ஆதம் பாஷா மற்றும் எனது மருமகன் இம்ரான் ஆகியோரை விடுவிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications