சொல்லி வச்சு கூட்டிட்டு வராங்களோ..விஜய் விருது விழாவில் அடுத்தடுத்து எழுந்த ‘அடுத்த சி.எம்’ குரல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் பேசிய மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என பலரும், தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் விஜய் எனப் பேசி உள்ளனர். இது கல்வி சார்ந்த விழா போல தெரியவில்லை, சொல்லிக் கொடுத்து பேச வைக்கிறார்கள் போல என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழாவில், அடுத்த முதலமைச்சர் நீங்கள்தான் என மாணவ மாணவிகள் பேசியது, அரசியல் அரங்கில் விமர்சனங்களைக் கிளப்பி விட்டுள்ளது.

Next CM Vijay Slogans Emerge at Scholarship Event Allegations of Scripted Speeches

தவெக கல்வி விருது விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழாவின் இரண்டாம் கட்டம் இன்று சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது. 10, 12 ஆம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுகள், ஊக்கத்தொகை வழங்கி தவெக தலைவர் விஜய் கௌரவித்தார். இந்த விழாவில் ஊக்கத்தகையை பெற வரும் மாணவர்கள் விஜய்யை வாழ்த்தி பேசுகின்றனர்.

அடுத்த முதலமைச்சர் விஜய்

அதில் ஒரு சில மாணவ மாணவிகள் அடுத்தடுத்து விஜய் தான் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் என வாழ்த்தி பேசினர். மாணவி ஒருவர் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் நீங்கள்தான் என விஜய்யைப் பார்த்துக் கூறினார்.

வால்பாறையைச் சேர்ந்த மாணவன் கார்த்திக்கிற்கு தங்க மோதிரம் பரிசு வழங்கினார் விஜய். அப்போது அந்த மாணவனின் தந்தை விஜய்யின் வேண்டுகோளையும் மீறி மேடையில் அவரைப் புகழ்ந்து பேசினார். அவர், விஜயகாந்த் மற்றும் எம்ஜிஆரை குறிப்பிட்டு விஜய் குறித்துப் பேசினார்.

பேசாதீங்க - விஜய் வேண்டுகோள்

அவரது பேச்சை அடுத்து மைக்கை வாங்கிய விஜய், மீண்டும் ஒரு வேண்டுகோள் என்று குறிப்பிட்டு, "2026 தேர்தலைப் பற்றி பேச வேண்டாம். அதேபோல் தயவுசெய்து இளைய காமராஜர் என்று என்னை அழைக்க வேண்டாம். அதற்குப் பதிலாக உங்கள் பள்ளி மற்றும் ஆசிரியர்களைப் பற்றி பேசுங்கள்" என மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கோரிக்கை வைத்தார்.

எழுந்து வரும் விமர்சனங்கள்

கல்வி விருது விழாவில் எல்லோரும் சொல்லி வைத்தது மாதிரி அடுத்த முதலமைச்சர் நீங்கள்தான் என்று விஜய்யை குறிப்பிட்டு பேசினர், இது செயற்கைத்தனமாக தெரிகிறது. கல்வி விழா மாதிரி தெரியவில்லை. சொல்லிக் கொடுத்து பேச வைத்திருக்கிறார்கள் என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+