குட்நியூஸ்.. பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை.. சென்னையில் என்ன விலை தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல், டீசல் விற்கப்படுகிறது.

Recommended Video

    சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை… பெட்ரோல் ரூ.107.45, டீசல் ரூ.97.52க்கு விற்பனை!

    இந்தியாவில் கடந்த 9 நாட்களில் 8 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை மாற்றிக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    No change in Petrol, Diesel prices today in India: What is the price in Chennai?

    ஆனால் இந்தியாவில் சர்வதேச அளவில் தற்போது போருக்கு இடையிலும் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் தற்போது பேரல் விலை குறைந்துள்ளது.

    சர்வதேச அளவில் தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100.18 டாலருக்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. முன்னதாக 5 மாநில தேர்தல் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

    கடந்த ஆண்டு நவம்பர் 5 முதல் 137 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி இருந்தது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81, டீசல் ரூ.91.88 என ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விலை இருந்தது. ஆனால் கடந்த 10 நாட்களுக்கு முன் இதன் விலையில் மாற்றம் ஏற்பட்டது.

    அதன்பின் தினமும் 80 பைசா, 70 பைசா என்ற அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. கடந்த 9 நாட்களில் மொத்தம் 8 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலையில் 6.40 ரூபாயும், டீசல் விலையில் 6 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

    ஆனால் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்று விற்கப்பட்ட அதே விலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் 107.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் டீசல் 97.52 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    டெல்லியில் பெட்ரோல் 101.81 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அங்கு டீசல் 93.07 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+