வாய்ப்பே இல்லை.. தனியாதான் நிற்கிறோம்.. உறுதியாக சொன்ன எடப்பாடி.. பாஜகவிற்கு போன ஷாக் மெசேஜ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் இன்று தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக ஆலோசனை செய்து வருகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை செய்து வருகிறது.

கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியான சில வார்த்தைகளை கட்சியின் டாப் தலைவர்களிடம் கூறியதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

No matter what, Wont return to BJP alliance says Edappadi Palanisamy ahead of AIADMK meeting

என்ன சொன்னார்?; கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியர்களை ஆதரிக்கும் விதமாகவும்.. அவர்களை கவரும் விதமாகவும் பல விஷயங்களை மேற்கொண்டு வருகிறார். அதிமுக - பாஜக மோதல் காரணமாக அவர்கள் கூட்டணி முறிந்துள்ளது. 2024 லோக்சபா, 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து தனியாக போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்ததால் அதிமுக கொள்கைக்கு உடன்படாத சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்தோம். கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு சிஏஏவை ஆதரித்தோம். வேறு வழியில்லாமல் சிஏஏவை ஆதரித்தோம் என எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். அதேபோல் இஸ்லாமியர்களை கவரும் விதமாக பல விஷயங்களை அவர் பேசி வருகிறார். பாஜகவுடன் இனி கூட்டணியே கிடையாது என்பது போல பேசி வருகிறார்.

கூட்டணி முறிவு: பெரும் விவாதம், மோதலுக்கு பின்பே .. அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக கூட்டணி என்பது இனி நடக்காது. 2024 லோக்சபா தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டோம். எங்கள் கூட்டணி மொத்தமாக முறிந்துவிட்டது.

இந்த கூட்டணியை நாங்கள் முறிக்கவில்லை. எங்கள் தொண்டர்கள்தான் முறித்தனர். இந்த கூட்டணி முறிவதற்கு காரணம் எங்கள் தொண்டர்களின் கோரிக்கைதான். அவர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டணியை முறித்து உள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.

கண்டிப்பாக கூட்டணி இல்லை: இந்த நிலையில் இன்று கூட்டணி பேச்சு வார்த்தைக்கு முன்பாக.. பாஜகவுடன் கண்டிப்பாக கூட்டணி வைக்க மாட்டோம். பாஜகவை தவிர்த்து மற்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம். திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகள் நம் கூட கூட்டணி வைக்கும் வைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

30 தொகுதிகளில் நாம் போட்டியிடுவோம்.. மீதம் உள்ள 10 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுப்போம். பாஜக இல்லாமல் அதிமுகவின் உண்மையான பலம் என்ன என்பதை நிரூபிப்போம்.. இஸ்லாமிய கட்சிகள், கொங்கு அமைப்புகள், நாடார் அமைப்புகளுடன் கூட்டணி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி அதிமுக டாப் தலைகளிடம் பேசி இருக்கிறாராம்.

தற்போது அதிமுக கூட்டணி கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை செய்து வருகின்றனர். இதில் பாஜக உடன் கூட்டணி கிடையாது என்பது தொடர்பாக உறுதியாக இன்றைய கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+