தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவம் தேவையில்லை, போலீஸ் போதும் - டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி!
சென்னை: நாளை நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு துணை ராணுவம் தேவையில்லை என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் நடந்துமுடிந்துவிட்ட நிலையில், தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெறவுள்ளது..
இந்நிலையில், ''கோவையில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சென்னை மற்றும் கரூர் பகுதிகளில் இருந்து கோவைக்கு ரவுடிகள் வந்துள்ளனர். இந்த ரவுடிகளால் தேர்தலின் போது பிரச்சனை ஏற்படலாம். திமுக என்ன சொல்கின்றதோ, அதை மட்டும்தான் காவல்துறை செய்கிறது. போலீஸ் துணையுடன் பணப்பட்டுவாடா நடக்கிறது.

மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையே ரவுடிகளுடன் கைகோர்த்து விட்டனர். கோவையில் இது தொடர்ந்து நடந்து வருகிறது. இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. திமுகவுக்கு துணையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும்.
மக்கள் பயமின்றி வாக்களிக்கத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் துணை இராணுவ படையினர் வரவழைக்கப்பட வேண்டும்'' என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரி கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை தர்ணாவில் ஈடுபட்டார் எஸ்.பி.வேலுமணி.
இந்நிலையில், ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், கோவையில் உள்ள வெளியூர்களைச் சேர்ந்த திமுகவினர் வெளியேற்றப்பட வேண்டும். போலீஸார் மைக் மூலமாக உத்தரவிட வேண்டும் என்று கோரி போராட்டத்தைக் கைவிட மறுத்தனர். ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே 4 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார் எஸ்.பி.வேலுமணி.இதனால் எஸ்.பி. வேலுமணி உட்பட40-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், ''உள்ளாட்சித் தேர்தலுக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், நாளைய தேர்தலுக்கு துணை ராணுவம் தேவையில்லை'' என தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு சார்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications