என்னை பார்க்க யாரும் வரலையே பீல் பண்ணும் அமீர்...அமீருக்காக யார் வருகிறார்கள் தெரியுமா??
சென்னை: உறவினர்களின் வருகையால் பிக்பாஸ் போட்டியாளர்கள் குதூகலித்து வருகிறது.
அனைத்து போட்டியாளர்களின் உறவினர்களும் வந்த நிலையில் அமீர் வீட்டில் இருந்து மட்டும் இன்னும் யாரும் வரவில்லை.
அமீருக்காக யார் வருவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கின்றனர்.

உறவினர்களின் வருகை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க போட்டியாளர்களை உறவினர்களின் வருகை நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யத்தை கூட்டி இருந்தது. ஒவ்வொரு போட்டியாளர்களின் உறவினர்களின் வருகை போட்டியாளர்களுக்கும் புது அனுபவத்தை கொடுத்திருந்தது. இந்த ஒரு தருணத்திற்காக போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் காத்துக்கொண்டிருந்தனர். முதலாவதாக அக்ஷராவின் குடும்பத்தினரில் தொடங்கி கடைசியாக சஞ்சீவ் குடும்பத்தினர் வந்து அனைவரையும் குதூகலப் படுத்தியுளளனர். இதில் ரசிகர்கள் பலர் அதிகமாக எதிர்பார்த்த ஒரு போட்டியாளரின் குடும்பத்தில் அமீர் உடைய குடும்பமும் ஒன்று.

அமீரின் வருத்தம்
சிறு வயதில் தாய் தந்தையை இழந்த அமீருக்காக யார் வருவார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. அவருடைய ஒரே உறவினரான அண்ணன் ஊட்டியில் வசிப்பதால் அவர் வருவாரா?? அல்லது அவருக்கு பாதுகாவலராக இருக்கும் அஷ்ரப் குடும்பத்தினர் வருவார்களா??என்று பலரும் ஆர்வத்தோடு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதே கேள்வியை நேற்றைய எபிசோடில் அமீரும் கேட்கத் துவங்கி விட்டார். நான் செய்யும் நடவடிக்கைகள் பிடிக்காததால் தான் என்னை தேடி பார்ப்பதற்காக யாரும் வரவில்லையோ என்று ஏங்க தொடங்கி இருக்கிறார்.

ரசிகர்களின் பாச மழை
சிறு வயதிலேயே தாய் தந்தையின் பாசத்தை இழந்து பாசத்திற்காக பலஇடங்களில் ஏங்கிக் கொண்டிருக்கும் அமீர் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் இவ்வளவு நாட்களாக இருந்து வந்தாலும் தற்போது குழந்தைத்தனமாக அமீர் செய்யும் சில சேட்டைகள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் அவருடைய கடந்த கால சோகக் கதையை கேட்ட ரசிகர்கள் பலர் அவர் மீது பாச மழைகளை பொழிந்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இதுவரைக்கும் அமீருக்காக ஆறுதலாக இருந்த அஷ்ரப் குடும்பத்தினர் மீதும் ரசிகர்களுக்கு பெரிய அபிப்ராயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களை இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்க்க வேண்டும் என்று ரசிகர்களும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

அஷ்ரப் குடும்பத்தின் வருகை
பல ரசிகர்கள் அவருக்காக யார் வருவார் என்று காத்திருக்கும் நேரத்தில் அஷ்ரப் குடும்பத்தினர்தன் வரப்போகிறார்கள். அவர்கள்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்களாம். இந்த செய்திகள் அமீருக்கு தெரியாததால் அவர் வருத்தமாக ஏக்கத்தோடு பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அது பற்றி தெரிந்த ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications