ஊரக உள்ளாட்சி தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் நிறைவு- கடைசிநாளில் போட்டி போட்டு மனுத்தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30-ல் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் டிசம்பர் 9-ந் தேதி தொடங்கியது.

இன்று மாலையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவதற்கு லட்சக்கணக்கானோர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இன்று கடைசி நாள் என்பதால் காலை முதலே 27 மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் கூட்டம் அலை மோதியது. இம்மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது.
வேட்புமனுக்களைத் திரும்பப் பெற டிசம்பர் 19-ந் தேதி கடைசி நாள். இதன் பின்னர் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications