வட இந்தியர்கள் பாஜக வாக்காளர்கள்.. அவர்களை ஆதரிக்க ஒரு கூட்டம் இங்கே இருக்கு..அட்டாக் மோடில் சீமான்

வட இந்தியர்கள் பாஜக வாக்காளர்கள், அதனால் அவர்களை ஆதரிப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கு என்று சீமான் கூறினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வட இந்தியர்கள் அடித்து விரட்டுவார்கள்.. ஏனென்றால் அதை ஆதரிப்பதற்கு என்று ஒரு கூட்டம் இங்கே இருக்கு. தமிழன் எங்கு அடி வாங்கினாலும் அதை ரசிப்பதற்கு, வேடிக்கை பார்ப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கு என்று சீமான் ஆதங்கத்துடன் கூறினார்.

தமிழ்நாட்டில் கட்டிட வேலைகள் போன்றவற்றில் ஈடுபடுவதற்காக வட இந்திய தொழிலாளர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வடமாநிலங்களைக் காட்டிலும் இங்கு வேலை வாய்ப்பு அதிகம்.. ஊதியமும் அதிகம் என சொல்லப்படுகிறது. இதனால், வடமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வர ஆர்வம் காட்டுகிறார்கள்.

வட மாநில தொழிலாளர்கள்

வட மாநில தொழிலாளர்கள்

வட மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ரயில்களில் நாள் தோறும் நூற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்களை காண முடிகிறது. இப்படி வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் இளைஞர்கள் குறித்து முறையான டேட்டா இல்லாததால்.. இதைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு சிலர் குற்றச்சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர். திருப்பூர், கோவை போன்ற தொழில் நிறைந்த மாவட்டங்களிலும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அடித்து விரட்டும் வீடியோ

அடித்து விரட்டும் வீடியோ

இதனிடையே, தமிழக இளைஞர்களை வட மாநிலத்தவர்கள் அடித்து விரட்டும் வீடியோ என்று கூறி இணையத்தில் அண்மையில் பரவியது. இந்தச் சம்பவம் கடந்த 14ஆம் தேதி திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் நடந்துள்ளது. வட மாநில தொழிலாளர்கள் மற்றும் தமிழக இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறையடுத்து பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள் கூட்டமாக திரண்டு தமிழக இளைஞர்களை விரட்டியதாக சொல்லப்படுகிறது.

சீமான் பேட்டி

சீமான் பேட்டி

இது தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை என்பதால் போலீசாரும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தச் சம்பவம் நடந்த போது, அங்கிருந்த ஒருவர் இதை வீடியோவாக எடுத்தும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவே இப்போது இணையத்தில் வேறு விதமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது சீமான் கூறியதாவது:-

உங்களைக் கூட தாக்கலாம்

உங்களைக் கூட தாக்கலாம்

வட மாநிலத்தவர்கள் தமிழர்களை தாக்குவார்கள் என்று நான் ரொம்ப நாளாக சொல்லிட்டு இருக்கேன். இது தொடக்கம்தான்., உங்களைக் கூட தாக்கலாம். நாம எல்லோரையும் தாக்கலாம். வட இந்தியர்கள் அடித்து விரட்டுவார்கள்.. ஏனென்றால் அதை ஆதரிப்பதற்கு என்று ஒரு கூட்டம் இங்கே இருக்கு. வட இந்தியர்கள் ஏற்கனவே இங்கே இருக்கிறாங்க... இந்தி கட்டாயம் என்று சொல்லும் ஒரு கூட்டம் உள்ளது அல்லவா... அவர்கள் எல்லாரும்தான். வட இந்தியர்கள் பாஜக வாக்காளர்கள். அதனால அவர்களை ஆதரிப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கு. தமிழன் எங்கு அடி வாங்கினாலும் அதை ரசிப்பதற்கு வேடிக்கை பார்ப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கு.

வலிமையை காட்டுங்கள்

வலிமையை காட்டுங்கள்

தமிழ்நாட்டில் பாஜக வளராது. பாஜக வளர்ந்தால் என்னைப் போல தனியாக தேர்தலில் நிற்குமா.. வளர்ந்துள்ளது என்றால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் போட்டியிட வேண்டியதுதானே... தனித்து போட்டியிட வேண்டியதுதானே.. நீங்க (பாஜக) மேலே ஒரு அதிகாரத்தை வைத்துக்கொண்டு.. ஊடகங்களை வைத்துக்கொண்டு நாங்கள் வளர்கிறோம்.. வளர்கிறோம் என கட்டமைக்கிறீங்க... தனியாக நின்று எந்த அளவுக்கு வளர்ந்து உள்ளீர்கள் உங்கள் வலிமை என்ன என்பதை காட்ட வேண்டும். வரும் தேர்தலில் நான் எனது வலிமையை காட்டுவேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+