ஆளுநர் ரவி - ரஜினி சந்திப்பை அரசியலாக்குகின்றனர்..இருப்பிடத்தை காட்டவே விமர்சனம்.. அண்ணாமலை பதிலடி!
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி - நடிகர் ரஜினிகாந்த் இருவரும் சந்தித்து அரசியல் பேசியதில் எந்த தவறும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Recommended Video
அண்மையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இந்த சந்திப்பின் போது அரசியல் பேசினோம். ஆனால் அதனை வெளிப்படையாக கூற முடியாது என்று தெரிவித்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாலகிருஷ்ணன் கருத்து
இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்தன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? இனியும் பொறுப்போமா? தமிழ்நாடு ஆளுநரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசி உள்ளார். மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்திப்பது ஏற்புடையதே.

திருமாவளவன் கருத்து
ஆனால் அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து 'தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியாது' எனவும் ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளது. ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல என்று கண்டனம் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், ஆளுநர் ஆர்.என்.ரவி முழுநேர அரசியல்வாதியாக செயல்படுகிறார். அவருடைய அரசியல் கடமை மாநில-மத்திய அரசுகளுக்கு இணைக்க போக்கை உருவாக்க வேண்டியது தான். ஆனால் அவர் ஆர்எஸ்எஸ்-காரராக முழு நேர அரசியல்வாதியாக செயல்படுகிறார். ஆளுநரின் போக்குகள் மாநில அரசுக்கு மட்டுமல்ல தேசிய அளவில் ஜனநாயகத்திற்கு முரணாக சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக இருப்பது கவலை அளிக்கிறது என்று தெரிவித்தார்.

அண்ணாமலை பதில்
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவி - ரஜினிகாந்தி சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் மிகமுக்கிய மனிதர். தமிழ்நாட்டின் பிரச்னைகளுக்காக பலமுறை குரல் கொடுத்துள்ளார். இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, ரஜினியை சந்தித்ததில் எந்தத் தவறும் இல்லை.

திமுக பி டீம்
ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு மனிதர்களையும் சந்திப்பது மரபாக இருக்கிறது. அதுபோல் தான் ரஜினியையும் சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின் போது அரசியல் பேசப்பட்டுள்ளது. இதற்கு திமுக கொடுக்கின்ற ஆக்சிஜனில் உயிர் வாழக் கூடிய சில தலைவர்கள், இருப்பிடத்தை காட்டுவதற்காக ரஜினியை விமர்சித்துள்ளனர்.
தமிழக அரசியல், தேசிய அரசியல் என பேசுவதில் எந்த தவறும் இல்லை. சமுதாயத்தில் நடக்கக் கூடிய விஷயங்கள் குறித்து பேசுவது தான் அரசியல். அதனால் அரண்டவன் கண்களுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பது போல், எல்லாவற்றுக்கும் பயப்படுகிறார்கள். எவ்வளவு மனிதர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தை பேசாமல் விட்டுவிட்டு, ரஜினியை மட்டும் சந்தித்ததை அரசியலாக்குகின்றனர் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications