குட்டீஸ்களுக்கு குட் நியூஸ்! நாளையும் வண்டலூர் பூங்கா செயல்படும்.. பள்ளி விடுமுறை காரணமாக அறிவிப்பு!
சென்னை: தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமையான நாளை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத்திட்டங்களில் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு கடந்த 16ம் தேதி தொடங்கி 23ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி 5ம் தேதியும், இதர மாணவர்களுக்கு ஜனவரி 1ம் தேதி வரையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் ஏதும் வைக்கப்பட வேண்டாம் என்றும், வேண்டுமெனில் வீட்டு பாடம் கொடுக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இதனையடுத்து சுற்றுலாத்தலங்களில் கூட்டம் அலை மோத தொடங்கி இருக்கிறது. தென் மாவட்டங்களை பொறுத்த அளவில் குற்றாலம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களிலும், அதேபோல குளிர் அதிகமாக இருந்தாலும் கொடைக்கானல், ஊட்டி ஆகிய இடங்களிலும் பெற்றோர்கள் குழந்தைகளுடன் படையெடுத்து வருகின்றனர்.

திறப்பு
வட மாவட்டங்களை பொறுத்த அளவில் வேலூர் கோட்டை, திருவண்ணாமலை கோயில், ஏற்காடு, ஏலகிரி போன்ற சுற்றுலாத்தலங்களிலும் கூட்டம் அலை மோத தொடங்கியுள்ளது. அதேபோல சென்னையில் இருப்பவர்கள் மகாபலிபுரம், வண்டலூர் போன்ற இடங்களில் குவிய தொடங்கியுள்ளனர். ஆனால் சென்னையில் உள்ள பிரதானமான பொழுது போக்கு பூங்காக்கள் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும். ஆனால் அரையாண்டு விடுமுறை காரணமாக இந்த வாரம் செவ்வாய்க்கிழமை(டிச.27) வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கம் போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சேதம்
சமீபத்தில் மாமல்லபுரத்தில் கரையை கடந்த மாண்டஸ் புயல் இந்த வண்டலூர் பூங்காவில் கடும் சேதத்தை ஏற்படுத்தி இருந்தது. அதாவது பூங்காவில் இருந்த 7 பெரிய மரங்கள் உட்பட 20க்கும் அதிகமான மரங்கள் முறிந்து விழுந்தன. அதேபோல பூங்காவின் சுற்றுச்சுவருக்குள் இருக்கும் அலுவலகத்தின் சுற்று சுவர் ஒன்று பலத்த மழை காரணமாக இடிந்து விழுந்தது. இதனை உடனடியாக ஊழியர்கள் சரி செய்தனர். ஆனால் இந்த புயல் காரணமாக பூங்காவினுல் இருந்த உயிரினங்களுக்கும், அதன் கூண்டுகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே அடுத்த நாளில் பூங்கா பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.

நீர்வாழ் உயிரின காட்சி சாலை
வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்போது 180 வகைகளை சேர்ந்த 2,500 உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மட்டுமல்லாது 24 மணி நேரமும் இங்குள்ள விலங்குகளை நேரலையில் மக்கள் கண்டுகளிக்கும் வசதியும் உள்ளது. பூங்காவை மேலும் நவீனப்படுத்த புதியதாக 'நீர்வாழ் உயிரின காட்சி சாலை' அமைக்கப்படப்பட இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதற்காக பூங்காவின் சொந்த வருவாய் நிதியிலிருந்து ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இந்த பணிகள் நிறைவுற்று தற்போது 'நீர்வாழ் உயிரின காட்சி சாலை' மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. இதில், 28 வகையான அலங்கார மீன்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய அங்கீகாரம்
ஏற்கெனவே பல அரிய மற்றும் அழிந்து வரும் உயிரினங்களை கொண்டுள்ள இந்த பூங்கா இப்போது புதிய அங்கிகாரத்துடனும், நீர்வாழ் உயிரின காட்சி சாலையுடன் புதுப்பொலிவு கொண்டு காட்சியளிக்கிறது. இந்த பூங்காவுக்கு வார நாட்களில் சுமார் 4,000க்கும் அதிகமானவர்களும், விடுமுறை நாட்களில் 10,000க்கும் அதிகமானவர்களும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் புவனேஸ்வரில் நடந்த தேசிய உயிரியல் பூங்கா இயக்குநர்கள் மாநாட்டில் மேலாண்மை மற்றும் பராமரிப்பு எனும் அடிப்படையில் 82 புள்ளிகளை பெற்று நாட்டின் சிறந்த பூங்காவாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications