அதிமுக தலைமை ஆபீசில் "ஒரு மாற்றம்".. கவனிச்சீங்களா.. எடப்பாடி கைக்குள் முழுதாக சென்ற கட்சி
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் பழைய பேனர்கள் மாற்றப்பட்டு, புதிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சு எழத் தொடங்கியதில் இருந்து, பரபரப்புக்கு எவ்வித குறையும் இல்லாமல் தொடர்ந்து வருகிறது. மே மாதத்தில் தொடங்கிய பிரச்னை, இன்று வரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நீதிமன்ற வழக்குகள் மூலம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரின் கைகள் மாறிமாறி வலுப்பெற்றாலும், தற்போது எடப்பாடி பழனிசாமியின் கைகளே கட்சிக்குள் ஓங்கியுள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது முதல் திருச்சி, கோவை, திருப்பூர், சேலம் என்று பல்வேறு மாவட்டங்களுக்குள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார். மறுபக்கம் ஓபிஎஸ் தரப்பில் இபிஎஸ் ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சசிகலாவுடன் பேச்சுவார்த்தை
இதனிடையே சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் ஓபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அண்மையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சசிகலாவை சந்தித்திருந்தார். இதனால் அதிமுகவில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

பேனர் கிழிப்பு
முன்னதாக ஜூன் 27ம் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகம் வந்திருந்தார். அப்போது தலைமை கழக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓபிஎஸ் படம் கிழிக்கப்பட்டது. இதன்பின்னர் ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்ற போது, அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இபிஎஸ் பேனரை கிழித்தனர்.

இபிஎஸ் கைகளில் அலுவலகம்
இதனைத்தொடர்ந்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டு, பூட்டப்பட்டது. பின்னர் நீதிமன்ற வழக்கு மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலக சாவியை கைப்பற்றினார். இதனைத்தொடர்ந்து நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கிய பின்னர், எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகம் வந்து தொண்டர்கள் மத்தியில் தனது பலத்தை நிரூபித்தார். கிட்டத்தட்ட முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் இபிஎஸ்-ஐ வரவேற்றனர். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் பேனர்கள் வைக்கப்படாமல் இருந்தது.

ஓபிஎஸ் புகைப்படம் அகற்றம்
இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் படங்கள் இருந்த பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களுடன் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் சேர்க்கப்பட்டு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications