சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜூன் 3, ஜூன் 13, ஜூன் 23... மு.க. அழகிரி, சசிகலா, ஓ.பி.எஸ்...திமுக. அதிமுகவில் பரபர திருப்பங்கள்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு மாதமாகிவிட்ட நிலையில் அடுத்த பரபரப்பு சம்பவங்கள் திமுக, அதிமுகவில் ஜூன் 3, ஜூன் 13, ஜூன் 23 ஆகிய நாட்களில் நிகழக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற உடனேயே அதுவரை ஒதுங்கி இருந்த மு.க. அழகிரி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்னார். இந்த வாழ்த்து செய்தி திமுகவின் பத்திரிகையான முரசொலி நாளேட்டிலும் வெளியானது.

ஸ்டாலின் பதவியேற்பு விழாவுக்கு மு.க. அழகிரி மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி ஆகியோர் கலந்துக்கொண்டனர் . அழகிரி மகன் துரை தயாநிதியை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆரத் தழுவி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து திமுகவில் மீண்டும் மு.க. அழகிரி இணைவது உறுதி என்றே கூறப்பட்டது.

செம திருப்பம்.. அடுத்த மாதமே சசிகலா ரீ என்ட்ரி.. தமிழகம் முழுக்க டூர்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்செம திருப்பம்.. அடுத்த மாதமே சசிகலா ரீ என்ட்ரி.. தமிழகம் முழுக்க டூர்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்

ஸ்டாலின் மதுரை பயணம்

ஸ்டாலின் மதுரை பயணம்

அண்மையில் முதல்வர் ஸ்டாலின், மதுரைக்கு சென்ற போது அழகிரி வீட்டுக்குச் செல்வார் என கூறப்பட்டது. ஆனால் கொரோனா தடுப்பு பணிகளில் மட்டும் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்தினார். இதனால் அழகிரி வீட்டுக்கு அவர் செல்லவில்லை.

கருணாநிதி பிறந்த நாள்

கருணாநிதி பிறந்த நாள்

இதனைத் தொடர்ந்து துரைதயாநிதியின் 2-வது மகனுக்கு பெயர் சூட்டும் விழா நடைபெறும்; அதில் ஸ்டாலின், அழகிரி இருவரும் பங்கேற்பார்கள் என்கிற தகவல் பரவியது. ஆனாலும் இந்த சந்திப்பும் நிகழவில்லை. இந்நிலையில் ஜூன் 3-ல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் வருகிறது. அன்றைய தினம் கருணாநிதி நினைவிடத்துக்கு ஸ்டாலின், அழகிரி இருவரும் இணைந்து செல்ல வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. இது திமுகவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினகரன் வீட்டு திருமணம்

தினகரன் வீட்டு திருமணம்

இன்னொரு பக்கம் அதிமுகவில் சசிகலாவின் 3 ஆடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி அங்கேயும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அதுவும் ஜூன் 13-ந் தேதி தினகரன் மகள் திருமணம்; ஜூன் 23-ல் தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிகளுக்கு யார் யார் அழைக்கப்படுகிறார்கள்? யார் யார் போகப் போகிறார்கள்? என்கிற திகுதிகு எதிர்பார்ப்பு அதிமுகவில் நிலவுகிறது.

சசிகலாவும் அதிமுகவும்

சசிகலாவும் அதிமுகவும்

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று விரும்புகிற ஓபிஎஸ் தரப்புக்கு நிச்சயம் அழைப்பு போகும். அதிமுகவில் ஓபிஎஸ்-க்கு ஒரு எம்.எல்.ஏ, ஒரு எம்பி ஆதரவுதான் உள்ளது. இவர்கள் மூவருமே தினகரன் வீட்டு திருமணத்துக்கு அல்லது தினகரன் வீட்டு திருமண வரவேற்புக்கு போகவே வாய்ப்புள்ளது.

சசிகலா- தினகரன்

சசிகலா- தினகரன்

மேலும் சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் சசிகலாவை தினகரன் இதுவரை சந்திக்கவில்லை. அத்துடன் அதிமுகவை மீண்டும் தம் வசமாக்கும் முயற்சியில் சசிகலா தீவிரமாக இருப்பதை அவரது ஆடியோ பேச்சுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. இதனால் சசிகலா- தினகரன் இடையேயான உறவு சுமூகமாக உள்ளதா? இல்லையா? என்பதையும் ஜூன் 13 தினகரன் வீட்டு திருமணம் வெளிப்படுத்த இருக்கிறது. இதனால் தமிழக அரசியலில் ஜூன் 3, ஜூன் 13, ஜூன் 23 ஆகிய நாட்களில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது எதிர்பார்ப்பு.

English summary
Sources said that AIADMK's O Panneerselvam faction may attend TTV Dhinakaran's Daughter Marriage on June 13.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X