அதிமுக பொதுக்குழு வழக்கில் ட்விஸ்ட்.. தலைமை நீதிபதிக்கு ஓபிஎஸ் மனு அனுப்பி வைப்பு.. என்ன நடக்கும்?
சென்னை; அதிமுக பொதுக்குழு வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. . ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி பண்டாரிக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அனுப்பி வைத்தார் வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதா இல்லையா என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்று தனி நீதிபதி உத்தரவிட்டார்.
அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்றது. இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன. அதோடு பொருளாளர் பதவியில் இருந்தும் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.
பின்னர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

ஓபிஎஸ் வழக்கு
இந்த நிலையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது.. விதிகளை மீறி இந்த பொதுக்குழு நடைபெற்றுள்ளதாக ஓ பன்னீர்செல்வம் புகார் அளித்துள்ளார்.இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார். அதில், பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டவில்லை. தலைமை கழகம் பொதுக்குழுவை கூட்ட முடியாது. விதியை மீறி இந்த பொதுக்குழு நடந்து உள்ளது என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனால் இந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

உச்ச நீதிமன்றம் உத்தரவு
உச்ச நீதிமன்ற விசாரணையின் முடிவில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி அமர்வு விசாரிக்கட்டும். இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் தனி நீதிபதி விசாரிக்கட்டும். சில விஷயங்களை மாற்ற முடியாது. உச்ச நீதிமன்றம் இதுவரை பிறப்பித்த உத்தரவுகள் உயர் நீதிமன்ற விசாரணையை பாதிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தது.

விசாரணை
இந்த வழக்கை 2 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில்தான் இன்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது என்று ஓபிஎஸ் தரப்பு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டது. என்றால் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிதான் முன்பு பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இன்று விசாரணை
அவரின் அமர்வு முன்னிலையிலேயே மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால், நீதிபதியை மாற்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்தது. ஆனால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பண்டாரி இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விஷயம் அறிந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நேற்று ஓபிஎஸ் தரப்பை கடுமையாக கண்டித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய நேரிடும் என்று விமர்சித்தார். இதையடுத்து நேற்று மீண்டும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பண்டாரியிடம் ஓபிஎஸ் தரப்பு தனி நீதிபதியை மாற்ற வேண்டும் என்று முறையீடு செய்துள்ளது. இந்த முறையீடு ஒரு பக்கம் செய்யப்பட்டு இருந்தாலும் பொதுக்குழுவிற்கு எதிரான வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை
அப்போது ஓபிஎஸ் தரப்பு நீதிபதி கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டது. இதையடுத்து பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற ஓபிஎஸ் அனுப்பிய மனுவை வாபஸ் வாங்க வேண்டும்.. 2 நாட்களுக்கு முன்பு நீங்கள் என்னிடமே சொல்லி இருந்தால் நானே விசாரணையில் இருந்து விலகி இருப்பேன் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஓபிஎஸ் தரப்பிற்கு தெரிவித்தார். மேலும் ஓ பன்னீர்செல்வம் தரப்பை அதிகாரபூர்வமாக மன்னிப்பு கடிதமாக அளிக்க கோரியது. ஆனால் உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினாலும், அதை மனுவாக தாக்கல் செய்ய முடியாது.

வழக்கு ஒத்திவைப்பு
நாங்கள் நீதிபதியை அவமதிக்கவில்லை, அதனால் மன்னிப்பு கேட்க முடியாது. மற்றபடி வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிய மனுவை வாபஸ் வாங்க தலைமை நீதிபதியிடம் புதிய மனு கொடுத்து உளோம் என்று ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக அதிமுக பொதுக்குழு வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைப்பதாக நீதிபதி தெரிவித்தார். ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி பண்டாரிக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அனுப்பி வைத்தார் வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதா இல்லையா என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்று தனி நீதிபதி உத்தரவிட்டார்
-
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications