மா.செக்களுக்கு ஓபிஎஸ் கொடுத்த சிக்னல்.. பதவி கேட்டவர்களுக்கு ‘பரிசு’.. பட்டியல் தயாரிப்பில் வேகம்!
சென்னை : அதிமுகவில் ஏற்கனவே பதவி கேட்டு கிடைக்காமல், அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை தங்கள் பக்கம் கொண்டு வந்து பதவி வழங்கும்படி மாவட்ட செயலாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சியை ஒட்டுமொத்தமாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில், தங்கள் ஆதரவாளர்களை அனைத்துப் பொறுப்புகளிலும் நியமித்து வருகிறது ஓபிஎஸ் தரப்பு.
அந்தவகையில், எடப்பாடி பழனிசாமி வகித்த இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வைத்திலிங்கம் நியமிக்கப்பட்டார். ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இருந்த மற்ற பொறுப்புகளுக்கும் தனது ஆதரவாளர்களை நியமித்து வருகிறார் ஓபிஎஸ்.
இந்நிலையில், அதிமுகவில் அதிருப்தியில் இருந்து வரும் நிர்வாகிகளுக்கு, முக்கிய பொறுப்புகளை கொடுத்து என்கரேஜ் செய்யுமாறு தனது ஆதரவு நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் மெசேஜ் கொடுத்துள்ளார்.

ஓபிஎஸ் குடைச்சல்
அதிமுக பொதுக்குழுவை நடத்தி இடைக்காலப் பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்றியதோடு, ஓபிஎஸ்ஸை கட்டம் கட்டி கட்சியில் இருந்தும் நீக்கினார் ஈபிஎஸ். வேறொரு கணக்குப் போட்டு ஓபிஎஸ் செய்த சம்பவம் அவருக்கே எதிராகத் திரும்பி, அதிமுக தலைமை அலுவலகமும் எடப்பாடி கைக்குப் போய்விட்டது. வங்கிக் கணக்கு தொடர்பான விவகாரத்திலும் எடப்பாடிக்கு சாதகமான பலன் கிடைத்துவிட்டது. கட்சி ரீதியாக ஈபிஎஸ்ஸின் கை ஓங்கியிருந்தாலும், அவருக்கு விடாமல் குடைச்சல் கொடுத்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.

போட்டி அதிமுக
ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல் முறையீடு செய்துள்ளது. அதே நேரத்தில், தற்போது கட்சி ஆலோசனைக் கூட்டங்களை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடத்தி வருவதால், கட்சிக்கு தனியாக அலுவலகமும் தேடப்பட்டு வந்தது. அதன்படி மந்தைவெளி பகுதியில் அதற்கான கட்டடத்தையும் பார்த்து ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

நிர்வாகிகள் நியமனம்
கட்சியில் தனது பலத்தைப் அதிகரிக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் ஓபிஎஸ். 6 மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் மட்டுமே தம் பக்கம் இருந்த நிலையில், மற்ற ஈபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களை நீக்கிவிட்டு, தனது ஆதரவாளர்களை மாவட்ட செயலாளர்களாக நியமித்துள்ளார் ஓபிஎஸ். அதிமுகவில் இருந்து பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும், அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க, மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்படலாம் என்றும் அறிவித்துள்ளார்.

ஓபிஎஸ் தரப்பு வேகம்
அதேபோல், காலியாக உள்ள பொறுப்புகள் விரைந்து நிரப்பப்படும் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மீது அதிருப்தியில் இருப்பவர்களை பதவிகளைக் கொடுப்பதன் மூலம் தன் பக்கம் திரட்டலாம் எனக் கணக்குப் போட்டுள்ளார் ஓபிஎஸ்.
தேர்தல் ஆணையத்தில் தன் பலத்தை நிரூபிப்பதற்கு, கட்சி நிர்வாகிகளின் ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தேவை. அதற்காகவே, அனைத்து பதவிகளுக்கும் வேகவேகமாக ஆதரவாளர்களை நியமிப்பதாகவும் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை தீவிரம்
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது ஓபிஎஸ் தரப்பு. ஒவ்வொரு மாவட்டத்திலும் தமக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு பொறுப்புகள் வழங்கவும் ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். ஈபிஎஸ் மீது அதிருப்தியில் பெரிதாகச் செயல்படாமல் இருக்கும் பலரையும் தம் பக்கம் கொண்டு வந்ருவதற்காக இந்த திட்டமாம். ஏற்கனவே பதவி கேட்டு கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளை கொடுத்து நம் பக்கம் இழுக்குமாறு கண்ணசைத்துள்ளாராம் ஓபிஎஸ்.
Recommended Video

விரைவில் பட்டியல்
ஒவ்வொரு மாவட்டத்திலும், பகுதி, வட்ட கழக நிர்வாகிகளை நியமிப்பதற்கு, வேகமாகச் செயல்படும் ஆட்களை தேர்வு செய்யும்படி மாவட்ட செயலாளர்களுக்கும், முக்கிய நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார் ஓபிஎஸ். அதன்படி மாவட்ட செயலாளர்கள் புதிதாக நியமிக்க வேண்டிய நிர்வாகிகளின் பட்டியலைத் தயாரித்து வருகிறார்கள். அதில், பதவி கிடைக்காததால் ஈபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் பலரும் இடம்பெற்றுள்ளனாராம். இந்த பட்டியலுக்கு ஓபிஎஸ் ஒப்புதல் பெற்று விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
-
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
இனிதான் ஆரம்பம்.. விஜயபாஸ்கர் பலே திட்டம்.. வெளியான ஆடியோ -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications