“104” - தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லையா? அப்ப ஏன் இந்த நம்பர் - பாயிண்டை பிடித்த ஓபிஎஸ்
சென்னை: தமிழ்நாட்டில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று தெரிவித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவசர உதவி எண்ணை அறிவித்ததன் மூலமாக தட்டுப்பாடு இருப்பது உறுதியாகி உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. புதுச்சேரியில் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதைபோல், தமிழ்நாட்டிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அரசு மருத்துவமனைகள் மருந்து, மாத்திரைகளுக்கு எவ்வித தட்டுப்பாடுகள் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மா.சுப்பிரமணியன் பேட்டி
இது தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், "தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடே இல்லை. ஒருவேளை மருந்து தட்டுப்பாடு இருந்தால், புகாரளிப்பதற்காக 104 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண் மூலம் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மருந்து தட்டுப்பாடு
இந்த நிலையில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் பரவி வரும் காய்ச்சல் தொடர்பாகவும், மருந்துகள் தட்டுப்பாடு தொடர்பாகவும் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், "ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இருந்தது போல் தமிழ்நாட்டிலும் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ஏன் இந்த எண்?
தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டாலும், மருந்து தட்டுப்பாடு குறித்த புகார்களுக்கு 104 என்ற எண்ணை அரசு அறிமுகம் செய்திருப்பதாக கூறுகிறார். இதிலிருந்தே மருந்து தட்டுப்பாடு நிலவுவது என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டு இருக்கிறது.

பள்ளிகள் விடுமுறை
'ப்ளூ' காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், பள்ளிகளுக்கு சிறிது காலம் விடுமுறை அளிக்குமாறு அறிக்கை வெளியிட்டு இருந்தேன். ஆனால், அமைச்சர் அவர்களோ பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கத் தேவையில்லை என்றும், அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் தெரிவித்து இருந்தார். ஆனால், 'ப்ளூ' காய்ச்சலைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலும் செப்டம்பர் மாதத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வருகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications