’அவரை’ தூக்கணும்! தங்கமணியை குறி வைக்கும் ஓபிஎஸ் கோஷ்டி! ஓ அதுக்குத்தான் இந்த பேச்சா? அதிமுக சண்டை!
சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு உறுதுணையாக இருக்கும் நிர்வாகிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு களத்தில் இறங்கி இருப்பது எடப்பாடி தரப்பினரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. அதன் வெளிப்பாடாகவே தங்கமணியை புகழேந்தி விமர்சித்தார் என்கின்றனர் விவரம் அறிந்த சேலம் ரத்தத்தின் ரத்தங்கள்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் மட்டுமல்லாது எடப்பாடி பழனிச்சாமி முதல் முறையாக முதல்வராக அறிவிக்கப்பட்ட போது இருந்தே வருக்கு உறுதுணையாக இருந்தவர்களில் முக்கியமானவர்கள் நாமக்கல் தங்கமணியும், கோவை வேலுமணியும்.
பல இக்கட்டான நேரங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உறுதுணையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அரசியல் பொருளாதாரம் உள்ளிட்ட பல வகைகளில் அவருக்கு ஆதரவளித்துள்ளனர்.அது மட்டும் அல்லாமல் எடப்பாடியின் மனசாட்சி போலவே விளங்குகின்றனர் இருவரும்.

தங்கமணி
நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல், சட்டசபை தேர்தல், எதிர்க்கட்சி தலைவர், முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட பல விவகாரங்களில் எடப்பாடிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்திருக்கிறார்கள். கொங்கு மண்டலம் அவர்கள் கோட்டை ரீதியிலேயே இருவரது செயல்பாடுகளும் கடந்த காலங்களில் இருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் அதிமுகவில் நடைபெற்று வரும் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடிக்கு முழுக்க முழுக்க இருவருமே பின்புலமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பதவி அளிக்கவில்லை என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் தாங்களாகவே பதவிகளை மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

மறைமுக நெருக்கடி
இப்படி எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கும் இருவரையும் தங்கள் தரப்புக்கு இழுக்க முடியாது என தெரிந்து கொண்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மறைமுகமாக அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுக்க முயற்சித்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே எஸ்பி வேலுமணி மீது டெண்டர் முறைகேடு வழக்கு, எல்ஈடி கொள்முதல் வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் இருக்கின்றன. இந்நிலையில்தான் நாமக்கல் தங்கமணியை குறி வைத்து இருக்கிறது ஓபிஎஸ் தரப்பு. அதன் வெளிப்பாடாகவே ஓ பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர் என புகழேந்தி கடுமையாக விமர்சித்து பேசினார் என்கின்றனர் விவரம் அறிந்த சேலம் தரப்பு நிர்வாகிகள்.

பெங்களூர் புகழேந்தி
இது தொடர்பாக நாமக்கல்லில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சில எம்எல்ஏக்கள் கொள்ளையடித்திருக்கிறார்கள். தங்கமணி மற்றும் வேலுமணி மிகப்பெரிய அளவில் கொள்ளை அடித்திருக்கிறார்கள். ஓபிஎஸ் குறித்து பல தவறான தகவல்களை தங்கமணி கிளப்பி விட்டு இருக்கிறார். தங்கமணி திருந்த வேண்டி இருக்கும் அல்லது திருத்தப்படுவார். என அதிரடி காட்டினார். அது மட்டுமல்லாமல் தங்கமணி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

ஒப்புதல் வாக்குமூலம்
ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் கொள்ளையடித்து நிறைய பணம் சேர்த்து வைத்திருப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தார். தற்போது எடப்பாடி தரப்பு கொள்ளையடித்திருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மையை பேசுறவங்க தெய்வத்திற்கு சமம் என்ற ஒரு காமெடி இருக்கும். அதைப்போல இரு தரப்பினரும் கொள்ளை அடித்ததாக மாறி மாறி ஒப்புதல் வாக்குமூலம் போல அளித்து வருவது உண்மையில் அதிமுக மாண்பை அழிக்கும் வகையில் இருப்பதாக அந்தக் கட்சி தொண்டர்களே புலம்பி வருகின்றனர்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications