சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துணை முதல்வர் டம்மினு தெரியும்! ஆனால் ‘அவர்’ தான் காரணம்! மேடையில் ஓபனாகப் பேசிய ஓ.பன்னீர்செல்வம்!

Google Oneindia Tamil News

சென்னை : துணை முதல்வர் பதிவு டம்மி என்ற எனக்கு தெரியும் நான் அதை வேண்டாம் என்று சொன்னேன் எனவும், கூவத்துரில் தொடங்கி இன்று வரை அவர்கள் அவருடன் இருக்க காரணம் டப்பு மட்டும் தான் என ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிரடியாக அறிவித்தார் ஓபிஎஸ்.

இதனையடுத்து சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வத்தால் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

’மறவர்’ பரம்பரை ஜெ.வாரிசு ஓபிஎஸ்.. 3 காரணம் சொல்றேன்! மா.செ. மீட்டிங்கில் கிளாஸ் எடுத்த பண்ருட்டி! ’மறவர்’ பரம்பரை ஜெ.வாரிசு ஓபிஎஸ்.. 3 காரணம் சொல்றேன்! மா.செ. மீட்டிங்கில் கிளாஸ் எடுத்த பண்ருட்டி!

மாவட்ட செயலாளர் கூட்டம்

மாவட்ட செயலாளர் கூட்டம்

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் ஜெயலலிதாவை நிரந்தர பொது செயலாளராக அறிவிப்பது போட்டி பொதுக்குழு நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஓபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,"ஒன்று அறை கோடி தொண்டர்களால் கழக ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டேன். 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த வேறு இயக்கம் இல்லை என்பதை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கினார்கள். இன்று அதிமுக உள்ள நிலை ஒரு மனிதாபிமானம் இல்லாத நிலை, சர்வாதிகார உட்சியில் நின்று கொண்டு, தோற்று போய் உள்ளார்கள் அவர்கள். எந்த நிலையிலும் மாபாவிகளை இந்த நாடு என்றும் மன்னிக்காது.

ஜெயலலிதா

ஜெயலலிதா

அடிப்படை உறுப்பினர்களை தொண்டர்களால் தேர்வு செய்ய வேண்டும் என்று உருவாக்கினார்கள் அதில் எதையும் மாற்றம் செய்ய முடியாது. ஜெயலலிதா மட்டுமே அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர். கூவத்துரில் தொடங்கி இன்று வரை அவர்கள் அவருடன் இருக்க காரணம் டப்பு மட்டும் தான். ஒற்றுமையாக இருக்க வேண்டும் நாங்கள் சொல்கிறோம், ஆனால் அவர் என்ன சொல்கிறார். தைரியம் இருந்தால் தனி கட்சி வைத்து நடத்துங்கள். எங்கு போய் நிற்பாய் என்று தெரியாது.

எடப்பாடி அல்ல

எடப்பாடி அல்ல

அவர் பெரிய தலைவர்கள் பாருங்கள் அன்று அவருக்கு அவளவு பெரிய வரவேற்பு. போட்டவனே அன்று மாலை போட்டார்கள். அவர் எடப்பாடி அல்ல டெட்பாடி. அதிமுக வங்கி கணக்கு செலவுகளை முறையாக மேற்கொள்ளவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பாதை மாறி போனால் பின்னால் ஊரு வந்து சேர முடியாது என்று சொல்லி இருக்கிறேன். துணை முதல்வர் பதிவு டம்மி என்ற எனக்கு தெரியும் நான் அதை வேண்டாம் என்று சொன்னேன்.. ஜல்லிக்கட்டு அன்று நடக்க காரணம் பிரதமர் மோடி தான்

சின்னம்மா

சின்னம்மா

எனக்கும் சின்னம்மா மற்றும் தினகரனுக்கும் சின்ன கருத்து வேறுபாடு இருந்தது. அதனால் அப்போது தர்மயுத்தம் நடத்தினேன். டிடிவி தினகரன் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தபோது, ஆட்சியை காப்பாற்ற என்னிடம் ஓடி வந்தனர். நான் ஆதரவு அளித்திருந்தால், ஸ்டாலின் முதல்வர் ஆகியிருக்க கூடும். ஆனால், ஜெயலலிதா ஆட்சி என்னால் கவிழ்ந்தது என வரலாற்றின் அழுக்கு என் மீது விடக்கூடாது என நான் நினைத்தேன்.

அமைச்சர் பதவி

அமைச்சர் பதவி

நான் இணைந்த போது கூட எந்த நிபந்தனையும் இல்லாமல் தான் இணைந்தேன். 4 வருட ஆட்சியில் நான் எதும் தவறு செய்திருந்தால் சொல்லுங்கள், பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் ஒரே இடத்தில் வெற்றி பெற்றது தேனியில் தான் அதற்காக, மத்திய அமைச்சர் கிடைக்க வேண்டியதை திட்டமிட்டு சதி செய்து தடுத்தனர். நான்கரை வருடங்கள் என்னையே வருத்திக் கொண்டு அவர்களுடன் இருந்தேன்." என்றார்.

English summary
O. Panneerselvam said in the support district secretaries' meeting that I know Deputy Chief Minister post is Dummy and I told him not to do that and the reason why they are staying with him till today is only money.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X