ஈரோடு இடைத் தேர்தலில் களமிறங்கும் ஓபிஎஸ்! அண்ணன் சொன்னால் ஓகே தான்! இபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த மாஜி!
சென்னை : ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிட தயார். அதுவும் இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்போம் என அவரது ஆதரவாளரான புகழேந்தி கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ.வான திருமகன் ஈவேரா மறைவால் காலியாக உள்ளதால் அத்தொகுதியில் பிப்ரவரி மாதத்தில் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் மார்ச் மாதத்தில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்திருக்கிறது.
கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளரான யுவராஜ் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பெற்றார். இதனால் தற்போது தமாகாவுக்கு அத்தொகுதி ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஈரோடு கிழக்கு தேர்தல்
இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிட தயார். அதுவும் இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்போம் என அவரது ஆதரவாளரான புகழேந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக புகழேந்தி," அதிமுக எடப்பாடி அணியில் இருக்கும் ஜெயக்குமார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இந்த தேர்தலில் போட்டியிடும் அதன் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று சொல்லவில்லை. ஒரு கட்சித் தொண்டன் தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று சொல்ல வேண்டும்.

புகழேந்தி
ஆனால் அது அவர்கள் வாயில் வராது. தேர்தலில் நிற்பதும் நிற்காதும் அடுத்த விஷயம் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்குவதும் இரண்டாவது. ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வெற்றி பெறுவார் எனச் சொல்வதில் என்ன கஷ்டம். அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை என தேர்தல் ஆணையம் சொல்ல வேண்டும். தற்போது அதிமுக சின்னமான இரட்டை இலை ஓபிஎஸ் இன் கையில் தான் இருக்கிறது.

தேர்தலில் போட்டி
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆறு தொகுதிகளிலும் ஜி.கே வாசனின் கட்சி இரட்டை இலை சின்னத்தில் தான் நின்றது. ஆறு தொகுதிகளிலும் தோல்வியடைந்து விட்டார்கள் இந்த கட்சி எதை நோக்கி போகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் இல்லத்தில் நடந்த துக்க சம்பவத்தின் வடுகூட மறையவில்லை. ஆனால் அதற்குள் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. வேறு வழியில்லை சந்தித்து தான் ஆக வேண்டும். நேற்று கூட ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

இரட்டை இலை
எங்கள் அண்ணன் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிட தயார். அதுவும் இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்போம். ஏனென்றால் அது எங்கள் சின்னம் அதன் உரிமையாளர் ஓ.பன்னீர்செல்வம் தான் அதில் யாரும் உரிமை கொண்டாட முடியாது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளர் எனக் கூறுவது தொடர்பான வழக்கு தான்.

சம்பந்தம் கிடையாது
அதற்கும் சின்னத்துக்கும் சம்பந்தம் கிடையாது அதிமுக சின்னம் தொடர்பான வழக்கு எங்கேயுமே இல்லை. அதிமுக சின்னத்தை பொருத்தவரை ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக தான் தீர்ப்பு இருக்கிறது. தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தின் உரிமையாளராக ஓ.பன்னீர்செல்வத்தை தான் அங்கீகரித்து இருக்கிறது. ஓபிஎஸ் சொன்னால் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய வேலைகளில் இறங்குவோம். எங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார்" எனக் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications