Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கம் உட்பட 3 இடங்களை தவிர வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்கக்கூடாது! தமிழக அரசு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் கிளாம்பாக்கம் உள்ளிட்ட 3 இடங்களைத் தவிர மற்ற இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் செயல்பட்டு வந்த நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து நகருக்கு வெளியே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

Omni bus operators should not pick up and drop pioneers in Chennai unapproved place says Tamilnadu govt

இந்த புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த டிச. இறுதியில் திறந்து வைத்தார். அதன் பிறகு படிப்படியாக அனைத்து பேருந்துகளும் கிளம்பாக்கத்தில் இருந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆம்னி பேருந்துகள்: இருப்பினும், தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்க அனுமதி தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர். கிளம்பாக்கத்தில் பேருந்துகளை நிறுத்த போதிய வசதி இல்லை என்று சொன்ன ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பயணிகள் வசதிக்காக நகரில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதி வேண்டும் எனக் கோரினர். இது தொடர்பாக அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இருப்பினும், அது தள்ளுபடி செய்யப்பட்டது.

இது குறித்து போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தெற்கு நோக்கி செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் சென்னை புறவழிச்சாலையில் போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஆகிய மூன்று இடங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 09.02.2024 தேதியிட்ட இடைக்கால உத்தரவினை எதிர்த்தும் அதனடிப்படையில் போக்குவரத்து ஆணையர் கடந்த 13.02.2024 அன்று வெளியிட்ட ஒரு விரிவான பத்திரிக்கைச் செய்தியை எதிர்த்தும், கடந்த 22.01.2024 அன்று போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த இரண்டு ஆணைகளை எதிர்த்தும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

போக்குவரத்து ஆணையர்: இதன்மூலம் கடந்த 22.01.2024 அன்று போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த இரு உத்தரவுகளும், சென்னை உயர்நீதிமன்றத்தின் 09.02.2024 தேதியிட்ட இடைக்கால உத்தரவும் மற்றும் போக்குவரத்து ஆணையரால் 13.02.2024 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தியும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் உறுதி படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி சென்னையில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் எக்காரணம் கொண்டும் கீழ்க்கண்ட 3 இடங்களை தவிர வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என அறிவிக்கப்படுகிறது.. சென்னை புறவழிச்சாலையில் போருர் சுங்கச்சாவடி, சென்னை புறவழிச்சாலையில் சூரப்பட்டு சுங்கச்சாவடி, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மேற்கண்ட 3 இடங்களை தவிர தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு அனுமதி இல்லை என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

3 இடங்களுக்கு மட்டுமே அனுமதி: இதனை மீறி மேற்கூறிய 3 இடங்களை தவிர வேறு இடங்களில் தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவது கண்டறியப்பட்டால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் அடிப்படையிலும் சென்னையில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் எக்காரணம் கொண்டும் மேற்கூறிய 3 இடங்களை தவிர வேறு இடங்களை தங்களது பயணச்சீட்டு முன்பதிவு மென்பொருளிலும், தனியார் செயலிகளிலும் பொதுமக்களை குழப்பும் வகையில் பதிவிடக்கூடாது எனவும் அவ்வாறு பதிவு செய்தால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இதனை மீறி செயல்படும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+