சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது பிளைட் இல்லை, ஆம்னி பஸ்தான்.. சென்னை டூ நெல்லை கட்டணம் ரூ.3400.. இதுக்கு இல்லையா சார் ஒரு என்டு?

Google Oneindia Tamil News

சென்னை: ஆம்னி பேருந்துகளுக்கான புதிய கட்டண விவரங்களை ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து நெல்லை செல்லும் பயணிகளுக்கான கட்டணமாக ரூ.2,063 முதல் ரூ.3,437 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தி , ஆயுத பூஜை , விஜயதசமி என அடுத்தடுத்து அரசு விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை காரணமாக ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே தென் மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களில் டிக்கெட் விற்பனை நிறைவு பெற்றுவிட்டது.

அதேபோல் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 2,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல பிற ஊர்களில் இருந்தும் 1,650 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வு ஏழைகளை பாதிப்பதில்லை! அமைச்சர் சிவசங்கர் கூறிய புது தகவல்! ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வு ஏழைகளை பாதிப்பதில்லை! அமைச்சர் சிவசங்கர் கூறிய புது தகவல்!

 ஆம்னி பேருந்துகள்

ஆம்னி பேருந்துகள்

இதனிடையே ஆம்னி பேருந்துகள் வழக்கம் போலவே விடுமுறை காலத்தை பயன்படுத்தி கூடுதல் கட்டணத்துடன் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். இதனால் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக இம்முறை பயணிகள் புலம்பி வருகின்றனர். இதனிடையே ஆம்னி பேருந்துகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார்.

புதிய கட்டணங்கள் வெளியீடு

புதிய கட்டணங்கள் வெளியீடு

இந்த நிலையில் ஆம்னி பேருந்துகளுக்கான புதிய கட்டணங்களை ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து கோவைக்கு குறைந்தபட்சம் ரூ.1,815இல் இருந்து அதிகபட்சமாக ரூ.3,025 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து மதுரைக்கு குறைந்தபட்சம் ரூ.1,739 முதல் அதிகபட்சமாக ரூ.2,632 வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்து கட்டண விவரம்

ஆம்னி பேருந்து கட்டண விவரம்

சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு ரூ.1,271ஆகவும், அதிகபட்சமாக ரூ.1,767 வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையில் இருந்து பழனிக்கு ரூ.1,650 முதல் ரூ.2,750 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை - சேலத்துக்கு ரூ.1,435 முதல் ரூ.2,109 வரையிலும், சென்னை- தென்காசி ரூ.2,079 முதல் ரூ.3,465 வரையிலும் வசூலிக்கப்படவுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூ.2,063 முதல் ரூ.3,437 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 அமைச்சர் சிவசங்கர்

அமைச்சர் சிவசங்கர்

இதனிடையே ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்து போக்குவரத்துத்துறை சிவசங்கர் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், ஆம்னி பேருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டணம் விடுமுறை நாட்கள், பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகளை நாட்களின் போதும் கடைபிடிக்கப்படுகிறதா என்று கண்காணிக்க்கப்படும். கடந்த காலங்களில் விதிக்கப்பட்ட கட்டணத்தை விடவும், தற்போது 20 முதல் 10 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து கட்டணம் தொடர்பான ஆய்வில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபடுவர் என்று தெரிவித்தார்.

English summary
Omni Bus Owners Association has released new fare details for Omni buses. Accordingly, the fare for passengers traveling from Chennai to Nellai has been fixed at Rs.2,063 to Rs.3,437.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X