சரத்குமார் செய்தது தப்புங்க.. ஏற்க முடியாது.. சீமான் விமர்சனம்! ஆன்லைன் ரம்மி விளம்பரத்தால் ஆத்திரம்
சென்னை: நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தது தவறு. ஆன்லைன் ரம்மி குறித்து மக்களிடம் கருத்து கேட்கும் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தனது கருத்தை கூறிவிட்டு டாஸ்மாக் குறித்தும் கருத்து தெரிவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
2018ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகே, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை வரவேற்பது தொடர்பாக இருகட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதுதொடர்பான வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் சீமான் உள்பட 14 பேரை விடுதலை செய்து குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் இன்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சலுகைகளை ஏற்கக்கூடாது
இந்தியாவில் நீதிபதிகள் கடவுளுக்கு சமமாக மதிக்கப்படுகிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு ரயில்களில் சலுகை வழங்குவதால் 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக மத்திய அமைச்சர் கூறுகிறார். நாட்டின் கடன் தொகை ரூ.100 லட்சம் கோடிக்கு அதிகமாக உயர்ந்துள்ளது.

ஏமாற்றும் பாஜக
சலுகை எந்த ரூபத்தில் வந்தாலும் ஏற்கக்கூடாது. இலவசங்களை எதிர்க்கும் பாஜகவும் வேளாண் குடிமக்களுக்கு ஏன் ரூ.6 ஆயிரம் வழங்குகிறார்கள். இதுவும் ஒரு ஏமாற்று வேலை தான். இலவசங்களால் நாடு வளராது என்பது அறிவார்ந்தவர்களுக்கு தெரியும். இது வாக்கை பறிப்பதற்கான கவர்ச்சி திட்டம் தான்.

பதில் இல்லை
இலவசங்கள் கொடுக்க பணத்தை எவ்வாறு ஈட்டுகிறார்கள் என்பதற்கு எந்த ஒரு பதிலும் யாரும் இதுவரை கூறவில்லை. கல்வி என்பது மானுட உரிமை. அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் கடன் வாங்கி படிக்க வேண்டிய நிலைமை வேறு எந்த நாட்டிலும் இல்லை. இங்கு உள்ளது.

சரத்குமார் மீது தவறு
ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிகர் சரத்குமார் நடித்தது தவறானது. சூது எந்த வகையில் வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆன்லைன் ரம்மி தடை செய்வது குறித்து மக்களிடம் கருத்து கேட்பதற்கு முன்பாக முதலமைச்சர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த வேண்டும். மேலும் டாஸ்மாக் கடையை மூடுவது மற்றும் எட்டு வழி சாலை அமைப்பது தொடர்பான முதலமைச்சரின் கருத்தை தெரிவித்து மக்களிடம் கேட்க வேண்டும்'' என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications