சென்னையில் அரசு மருத்துவமனைகளில் வெறும் 2 ஆக்ஸிஜன் பெட்தான் காலி.. புரிந்து கொள்ளுங்கள்!
சென்னை: சென்னையில் அரசு மருத்துவமனைகளில் வெறும் 2 ஆக்ஸிஜன் பெட்டே காலியாக உள்ளது. நிலைமையை புரிந்து கொண்டு மாஸ்க் அணிவது. தனித்திருப்பது மட்டுமே மக்களுக்கு ஆபத்து வராமல் தடுக்கும்.
தமிழகம் முழுவதும் 33272 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ள நிலையில் 3335 படுக்கைகள் காலியான உள்ளன. 8325 ஐசியு படுக்கைகளில் 509 காலியாக உள்ளன. 26536 சாதாரண படுக்கைகளில் 8022 படுக்கைகள் காலியாக உள்ளன. சென்னையில் உள்ள ஐந்து மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைகளில் மொத்த 2323 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ள நிலையில் 2 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது.
கொரோனா பரவல் உச்சம் பெற்றுவதால் மக்கள் மாஸ்க் அணிவதுதான் ஒரே தீர்வு, வெளியில் செல்வதை குறைத்து வீட்டில் இருப்பது நல்லது. கொரோனா உங்களை மட்டுமல்ல உங்கள் குடும்பம் முழுவதையும் மோசமாக பாதிக்கும் அபாயம் உள்ளது. சென்னையில் அரசு மருத்துவமனைகளின் உண்மை நிலவரத்தை இப்போது பார்ப்போம்.

கே.எம்.சி
கே.எம்.சி மருத்துவமனை (கீழ்பாக்கம்)
ஆக்சிஜன் படுக்கை - 0/170
ஐ.சி.யு ஆக்சிஜன் படுக்கை - 0/130
சாதாரண படுக்கை - 11/200

கிங்ஸ்
கிங்ஸ் மருத்துவமனை (கிண்டி)
ஆக்சிஜன் படுக்கை- 1/198
ஐ.சி.யுவில் உள்ள ஆக்சிஜன் படுக்கை - 0/102
சாதாரண படுக்கை - 21/ 250

ராஜீவ் காந்தி
அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை (சென்ட்ரல்)
ஆக்சிஜன் படுக்கை - 0/845
ஐ.சி.யு ஆக்சிஜன் படுக்கை - 0/385
சாதாரண படுக்கை - 62/ 388

ஓமந்தூரார்
ஓமந்தூரார் மருத்துவமனை(திருவல்லிக்கேணி)
ஆக்சிஜன் படுக்கை- 0/437
ஐ.சி.யு ஆக்சிஜன் படுக்கை - 0/190
சாதாரண படுக்கை - 12/100

ஸ்டான்லி
ஸ்டான்லி மருத்துவமனை (வண்ணாரப்பேட்டை)
ஆக்சிஜன் படுக்கை- 1/800
ஐ.சி.யு ஆக்சிஜன் படுக்கை - 0/150
சாதாரண படுக்கை - 51 / 1450

6 பேர் மரணம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவசர ஊர்திகளில் வரும் வரும் நோயாளிகள் உடனடியாக சிகிச்சை அளிக்கவும். அதற்கான ஏற்பாடுகளை ஒரிரு நாட்களில் செய்வதாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் இன்று செய்தியாளர் சந்திப்பில் உறுதி அளித்துள்ளார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இருந்தபடியே நேற்று 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தவிர்க்க தற்போது 120 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications