’விஸ்வகர்மா' குல தொழில் திட்டம்? செருப்பு தைப்பவர் மகன் செருப்பு தான் தைக்கனும்! வெப்சைட் பாருங்க
சென்னை: மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் அப்பட்டமாக குலத்தொழில் திட்டத்தை ஊக்குவிக்கிறது என எதிர்ப்பு எழுந்து வருகிறது. தமிழகத்தில் அதை அப்படியே செயல்படுத்த முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். இந்த நிலையில் குலத்தொழில் முறையை ஊக்குவிப்பது போலவே அந்த இணையதளத்திலும்தகவல் கேட்கப்படுகிறது. உதாரணத்திற்கு தச்சு தொழில் செய்பவரின் மகன் தச்சு தொழில் செய்தால் மட்டுமே கடன் வழங்கப்படும். மேலும் தனது தந்தையின் தொழிலை தான் தானும் செய்கிறேன் என ஒப்புதல் அளித்தால் மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் வகையில் வெப்சைட் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பயனாளிகளுக்கு பயிற்சி மற்றும் கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது மேலும் 2 லட்சம் ரூபாய் வரை ஜாமீன் இல்லாமல் கடன் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தச்சு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் விஸ்வகர்மா சமூகத்தினரை வளர்ப்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
பாரம்பரிய தொழில் செய்தவர்களாக இருக்க வேண்டும், பொருளாதாரத்தில் பின்தங்கியவராக இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளுக்கு கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 5 சதவீத வட்டி விகிதத்தில் கடனும் வழங்கப்படுகிறது. பிஎம் முத்ரா திட்டத்தில் 8 முதல் 12 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும் நிலையில், இந்த திட்டத்தில் வெறும் 5 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் தங்களுக்கு தேவையான உபகரணங்கள் பொருட்கள் மற்றும் மூலப் பொருட்களை வாங்குவதோடு தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி மற்றும் அவற்றை சந்தைப்படுத்தும் வசதிகளையும் இந்த திட்டம் வழங்குகிறது. இந்த நிலையில் இந்தத் திட்டம் குலத் தொழிலை ஊக்குவிக்கிறது போல இருப்பதாகவும் , தமிழகத்தில் அதனை அப்படியே செயல்படுத்த முடியாது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் பிஎம் விஸ்வகர்மா இணையதளத்தை பார்வையிட்ட போது அது உண்மைதான் என்பது போலவே இருக்கிறது. https://pmvishwakarma.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து நீங்கள் பிஎம் விஸ்வகர்மா இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். முதலில் லாக்-இன் பாஸ்வேர்டை உருவாக்கி, ,அதற்குப் பிறகு உங்கள் பெயர், தொலைபேசி எண், ரேஷன் கார்டு, ஆதார் ஆவணங்களை சரி பார்க்க வேண்டும். அதற்கு பிறகு வருமானச் சான்றிதழ், தொழில் சான்றிதழ், வங்கி கணக்கு விவரங்களை பதிவிடலாம் தொடர்ந்து ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தை சப்மிட் செய்யலாம்.
இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் 2 கோடியே 60 லட்சத்து 30 ஆயிரத்து 52 பேர் பதிவு செய்துள்ளதாகவும், சுமார் ஒன்றரை கோடி விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளதாகவும், 59 லட்சத்து 65 ஆயிரம் விண்ணப்பங்கள் இரண்டாம் கட்ட பரிசீலையில் உள்ளதாகவும், 25 லட்சத்து 26 ஆயிரத்து 530 விண்ணப்பங்கள் மூன்றாம் கட்ட பரிசீலனை முடிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 25 லட்சத்து 11 ஆயிரத்து 378 விண்ணப்பங்கள் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த இணையதளம் குறிப்பிடுகிறது.
இதில் எங்கு பிரச்சனை என்று பார்க்கும்போது உங்கள் ஆதார் ரேஷன் கார்டு விபரங்களை கொடுத்த பிறகு உங்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை சேர்க்க வேண்டும். அதற்கு பிறகு நிரந்தர முகவரி தற்காலிக முகவரி கொடுத்த பின்பு தொழில் மற்றும் வர்த்தக விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அதனை உறுதி செய்யும் போது ”நான் செய்யும் வேலை அல்லது தொழில் எனது குடும்ப தொழில் தான் என்பதை உறுதி செய்ய வேண்டும்”.. அது கட்டாயமாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை ஒரு தொழில் செய்பவர் வேறு தொழில் செய்தாலோ அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும். உதாரணத்திற்கு தச்சு தொழில் செய்பவரின் தந்தை தச்சு தொழில் செய்தவராகத் தான் இருக்க வேண்டும். தந்தை தச்சு தொழில் செய்பவராகவும் மகன் தையல் தொழில் செய்பவராகவும் இருந்தால் இந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என கூறப்படுகிறது.
இதுதான் விஸ்வகர்மா திட்டம் குலத்தொழில் திட்டத்தின் மறுவடிவமாக இருப்பதாக குற்றச்சாட்டப்படுகிறது. முத்ரா திட்டத்தின் கீழ் வேறு பல தொழில்களுக்கு கடன் வழங்குகிறது மத்திய அரசு. அதில் குடும்பத் தொழில் பற்றி கேட்பது கிடையாது என்பது வலதுசாரி ஆதரவாளர்கள், பாஜக ஆதரவாளர்கள் கருத்தாக இருக்கிறது. அதே நேரம், முத்ரா திட்டத்தில் 8% வட்டி விகிதம் என்பதால் 5% வட்டி கொண்ட விஸ்வகர்மா திட்டத்திற்கு மக்கள் ஈர்க்கப்படுவார்கள் என்பது மறைமுக அஜெண்டா என்பது குற்றச்சாட்டாக உள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications