சரியாக.. சசிகலா பிறந்தநாளில் ஓபிஎஸ் சொன்ன வார்த்தையை கவனிச்சீங்களா.. ஓஹோ.. இதுதான் பின்னணி!
சென்னை: சசிகலா உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கிய அதிமுகவே இலக்கு என்று சசிகலாவின் பிறந்தநாளன்று ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
Recommended Video
அரசியலில் சில சம்பவங்கள் கோ இன்சிடன்ஸ் என்று பார்க்கப்பட்டாலும், அதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருப்பது, அடுத்த சில நாட்களில் புரிய வரும். அதுபோல் சசிகலா இன்று 68வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். சிறையில் இருந்து விடுதலை அடைந்த பின்னர், பல்வேறு அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வந்தவர் சசிகலா.

தமிழக அரசியலில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்த சசிகலா, இப்போது அதிமுகவை ஒன்றிணைப்பேன் என்று கூறி தொண்டர்களை சந்தித்து வருகிறார். இதனால் மீண்டும் சசிகலாவின் பின் அதிமுக செல்லுமா என்ற கேள்வி எழுந்த போது, சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கடுமையான நிலைபாட்டை எடுத்து நிற்கிறார்.
இதனிடையே ஒற்றைத் தலைமை விவகாரத்தில், ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே பிரச்னை எழுந்ததால், இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். தொடர்ந்து ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது. அந்தத் தீர்ப்பில் அதிமுகவில் ஜூன் 23-க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், மீண்டும் அதிமுக ஒன்றிணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. கசப்புகளை மறந்து விட்டு அதிமுக ஒன்று பட வேண்டும். அன்பு சகோதரர் நானும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து சிறப்பாக செயல்பட்டோம். கூட்டுத் தலைமையாக செயல்படுவோம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார். அதுமட்டுமல்லாமல் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கும் அழைப்பு விடுத்தார்.
இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலா, டிடிவி தினகரனுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர் செல்வம், அழைப்பு விடுத்தது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. ஓபிஎஸ்-ன் அழைப்பை ஏற்கனவே டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார். அதேபோல் சசிகலாவின் பிறந்தநாளன்று ஓ.பன்னீர் செல்வம், மீண்டும் இணைப்புக்கு அழைப்பு விடுத்தது தற்செயலானது அல்ல என்றே பார்க்கப்படுகிறது. அதிலும் சசிகலா என்று அழைக்காமல், சின்னம்மா என்று கூறியுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஓபிஎஸ் அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ள நிலையில், விரைவில் ஓபிஎஸ் - டிடிவி தினகரன் - சசிகலா ஆகியோர் ஒன்றாக சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்












Click it and Unblock the Notifications