லாஸ்ட் துருப்பு.. எடப்பாடியிடம் அதிமுக.. அதெப்படி சரியாகும்? அப்பீல் போன ஓபிஎஸ்: 3ம் தேதி ஒத்திவைப்பு
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், தீர்மானங்களை எதிர்த்த ஓபிஎஸ், ஆதரவாளர்களின் வழக்கு விசாரணையை, வரும் ஏப்ரல் 3ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. "தன்னை நீக்கியது தவறு என்றால் அதன்பின் நடந்த விஷயங்கள் மட்டும் எப்படி சரியாகும்?" என்றும் ஓபிஎஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணையை, வரும் ஏப்ரல் 3ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
"அதிமுக பொதுச்செயலாளர்" தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும், இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சார்பில் தனித்தனியாக முறையீடு செய்யப்பட்டது.
வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்குமாறு பொறுப்பு நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் முன்னிலையில் முறையீடு செய்யப்பட்டது.

பொதுச்செயலாளர்
அதனையேற்ற நீதிபதி குமரேஷ் பாபு பொதுக்குழுத் தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் வழக்கு ஆகியவற்றை அவசர வழக்காக ஏற்று விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ்பாபு கடந்த 28ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.. இதனால், ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது...

ஹைகோர்ட்
அதேசமயம், அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் அப்பீல் செய்து கொள்ளலாம் என்றும் ஹைகோர்ட் கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு முன்பும் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது.. அத்துடன், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்து, ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுச்செயலாளராக அவசர அவசரமாக பதவி ஏற்றுக்கொண்டார்...

அப்பீல்
ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ள மனுவில், தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. கட்சியின் விதிகளுக்கு எதிராக உள்ளதாகவும் ஓபிஎஸ் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது... தனி நீதிபதியின் தீர்ப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேல் முறையீட்டு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும்வரை அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவதற்கு தடை விதிக்கவும் தனி நீதிபதியின் உத்தரவிற்கும் தடைவிதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பின் இந்த மேல்முறையீடு வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வர இருந்தது...

மனோஜ் பாண்டியன்
ஆனால், ஓபிஎஸ் மனு மட்டும், நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதால் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தரப்பு தாங்களும் ஓபிஎஸ் வைக்கும் அதே கோரிக்கையை வைத்துதான் மனுத்தாக்கல் செய்துள்ளோம். எனவே 4 மனுக்களையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.. கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு இன்றைய தினம், 4 பேரின் வழக்கையும் விசாரிக்கலாம் என்று தெரிவித்திருருந்தனர்.. நேற்றுமுன்தினம் விசாரிக்கப்பட இருந்த வழக்கு நேற்றைய தினம் மாற்றப்பட்டு, அது விசாரிக்கப்படாமல் இன்று விசாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்பார்ப்பு எகிற வருகிறது.

ஒரே அஸ்திரம்
ஆனால், ஓபிஎஸ் மனு மட்டும், நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதால் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தரப்பு தாங்களும் ஓபிஎஸ் வைக்கும் அதே கோரிக்கையை வைத்துதான் மனுத்தாக்கல் செய்துள்ளோம். எனவே 4 மனுக்களையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.. கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு இன்றைய தினம், 4 பேரின் வழக்கையும் விசாரிக்கலாம் என்று தெரிவித்திருருந்தனர்.. நேற்றுமுன்தினம் விசாரிக்கப்பட இருந்த வழக்கு நேற்றைய தினம் மாற்றப்பட்டு, அது விசாரிக்கப்படாமல் இன்று விசாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்பார்ப்பு எகிறியது.

+பிளஸ் பாயிண்ட்
அதன்படியே, இன்று காலை ஹைகோர்ட்டில் விசாரணை ஆரம்பமானது.. மேல்முறையீடு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் வழக்கை விசாரித்தனர்.. என்னை கட்சியில் இருந்து நீக்கியதில் சட்ட விதிமீறல் உள்ளதாக தனி நீதிபதி கூறியுள்ளார் என்று ஹைகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பும் வாதத்தை முன்வைத்தது.. மேலும், இடைக்கால நிவாரணம் கிடைக்கும் வகையில் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும், தன்னை நீக்கியது தவறு என்றால் அதன்பின் நடந்த விஷயங்கள் மட்டும் எப்படி சரியாகும்? என்றும் ஓபிஎஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.. இதையடுத்து, வழக்கு விசாரணையை, வரும் ஏப்ரல் 3ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.












Click it and Unblock the Notifications