வெய்ட் பண்ணுங்க.. வெய்ட்டா செய்வோம்! ஆதரவாளர்களை தேற்றிய ஓபிஎஸ்! மருத்துவமனையில் போட்ட பக்கா ப்ளான்!
சென்னை : ஒற்றை தலைமை விவகாரத்திற்கு இடையே அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியால் நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தே அவர் தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாகவும் அப்போது பல்வேறு தகவல்களை அவர் தனது ஆதரவாளர்களிடம் பகிர்ந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது..
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததிலிருந்து நாளுக்கு நாள் பல்வேறு அதிரடி திருப்பங்களும் சுவாரஸ்ய நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. கட்சியில் தனக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அடுத்தடுத்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கி அதிமுகவில் தனது இருப்பை உறுதி செய்து கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தனக்கு எதிராக செயல்பட்ட மூத்த நிர்வாகிகளை தான் நீக்கி விட்டதாகவும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் பதவிகளில் தானே தொடர்வதாக அதிரடியாக கூறி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இதற்கான விடை நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் கைகளில் தான் உள்ளது.

அதிமுக அலுவலகம் சீல்
இதனிடையே அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஒருபுறம் காவல்துறையினர் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்த நிலையில் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வம் திருடிச் சென்று விட்டதாக எடப்பாடி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நா ராயப்பேட்டை காவல் நிலையத்தில் இருதரப்பினரும் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நீதிமன்றம் செல்ல வேண்டும்
இது ஒருபுறம் இருந்தாலும் அதிமுக அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்ட பின் அதற்கு உரிமை கொண்டாடுவது என்ற ஒரு பெரும் பிரச்சனை இருக்கிறது. இதற்காக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தரப்பு மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. இது முடிவடைந்த பிறகு அதிமுகவில் தனக்கு இருக்கும் மாவட்ட செயலாளர் மற்றும் பொதுக்குழு ஒன்றிய செயலாளர் ஆகியோரை வைத்து தாங்கள்தான் உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையத்தை நாட முடிவு செய்திருக்கிறது ஓபிஎஸ் தரப்பு. ஏற்கனவே பொதுக்குழு செல்லாது என தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்த அஸ்திரங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

தெம்பில் எடப்பாடி
ஆனால் தனக்கு எந்த பிரச்சினையும் வராது கட்சியில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் தங்கள் தரப்பில் இருப்பதால் தெம்பில் இருக்கிறார் எடப்பாடி. பெரும்பான்மை பலம் தனக்கே இருப்பதால் எப்படியும் அதிமுக முழுக்க முழுக்க தனது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசித்து வருகிறார். இதனிடையே கொரோனா காரணமாக எதிர்பாராத விதமாக பாதிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தேற்றிய ஓபிஎஸ்
இருந்த போதிலும் மருத்துவமனையில் இருந்தவாறு தனது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார் ஓபிஎஸ். தற்போது தங்கள் அணிக்கு எடப்பாடி தரப்பிலிருந்து ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் வருவதால் உற்சாகத்தில் இருக்கும் அவர், மேலும் நிர்வாகிகளை இழுக்க வேண்டும் என தனது ஆதரவாளர்களை அறிவுறுத்தி இருக்கிறார். மேலும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட நடவடிக்கைகள் தற்போது தீவிரமாகி இருக்கும் நிலையில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் எனவும். தற்போதைக்கு பொறுமை காத்து நிர்வாகிகள் ஆதரவை பெற்ற பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கலாம். எது செய்தாலும் அசுர பலத்துடன் எதிர் அணியை திணறடிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம் என கூறி இருக்கிறார் ஓபிஎஸ். இதனால் அவரது தரப்பு நிர்வாகிகள் உற்சாகமாக அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications