நான்தான் அதிமுக.. கெத்து காட்ட தலைமைக் கழகம் வந்த ஓபிஎஸ்- திடீர் ஆலோசனை
சென்னை: தமது கட்டுப்பாட்டில்தான் அதிமுக இருக்கிறது என்பதி காட்டும்விதமாக இன்று திடீரென அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் அணி துளிர்விட்டு வருகிறது. அதிமுகவில் அண்மையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளை இதை தொடர்ந்து வெளிப்படுத்தியே வருகின்றன என நாம் பதிவு செய்திருந்தோம்.

இந்நிலையில் இன்று மாலை திடீரென அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் வருகை தந்தார். அவருடன் செம்மலை உள்ளிட்டோரும் தலைமை அலுவலகம் வந்தனர். பின்னர் ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் தனியே ஆலோசனை நடத்திய செய்தி தீயாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், செயற்குழு கூட்டப் பணிகளுக்குத்தான் ஓபிஎஸ் அதிமுக தலைமைக் கழகம் வந்ததாக அங்கிருக்கும் ஊழியர்கள் கூறுகின்றனர்.
அதேநேரத்தில் அதிமுகவினரோ, அதிமுக எனும் கட்சி என்னுடைய கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்கிறது.. ஆட்சிக்கு மட்டும்தான் எடப்பாடி முதல்வர். இந்த வேறுபாட்டை தொடர்ந்து சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்க வேண்டு என ஓபிஎஸ் தரப்பு இப்போது விரும்புகிறது. இதனை தொடக்கத்தில் இருந்தே செய்யாமல் விட்டுவிட்டார். ஆகையால்தான் இத்தகைய கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துகிறார் ஓபிஎஸ் என்கின்றனர்.
-
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications