செல்லாது செல்லாது! அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைவருக்கும் பதவி! ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை!
சென்னை : பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அளைத்து நிர்வாகிகளும், அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள் என அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் திடீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுகவில் நடந்து வரும் அதிகார சண்டைகள் காரணமாக மாநில அளவில் மட்டுமல்ல மாவட்ட அளவிலும் அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் பல்வேறு நிர்வாகிகள் அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானம் பொதுக்குழுவில் முன்மொழியப்பட்ட நிலையில், அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும் அவரது பதவிகளும் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஓ பன்னீர்செல்வம்
இதனையடுத்து ஓ பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட அனைவரும் நீக்கப்பட்டனர் எனவும் அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என அறிவிக்கப்பட்டது. சில நாட்கள் இடைவேளைக்குப் பிறகு, அதிமுகவில் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களான வெல்லமண்டி நடராஜன், கன்னியாகுமரி அசோகன், அதிமுகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் குமார். மற்றொரு மகனான ஜெயப்பிரதீப் ஆகியோரை அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.

ஆதரவாளர்கள் நீக்கம்
பிறகு கடந்த 15ஆம் தேதி கட்சிக் கொள்கைகளுக்கும் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாக முன்னாள் எம்எல்ஏ திண்டுக்கல் சுப்புரத்தினம், அம்மா பேரவை துணைச் செயலாளர் மாறன், இலக்கிய அணி துணைச் செயலாளர் முருகேசன், வலசை மஞ்சுளா, வேலூர் சுரேஷ் பாபு,திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவகர், தஞ்சாவூரைச் சேர்ந்த தயாளன், சரவணன், சதீஷ் ,செந்தில், பாண்டியன், ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மீண்டும் நியமனம்
இந்நிலையில், பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அளைத்து நிர்வாகிகளும், அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள் என அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் திடீர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அளைத்து நிர்வாகிகளும், அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள்.
Recommended Video

அறிக்கை
மேலும், இரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயாளர், தொகுதிக் கழகச் செயலாளர் மற்றும் தொகுதிக் கழக இணைச் செயலாளர்கள் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டு, ஏற்கெனவே பணிபுரிந்தவர்கள் மீண்டும் அந்தந்தப் பொறுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதையும், காலியாக உள்ள பொறுப்புகள் விரைந்து நிரப்பப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், தொகுதிக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதிக் கழக இணைச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications