அந்த டீம்.. டக்குனு மாறிட்டாங்க.. ஓபிஎஸ் மௌனமே ஜெயலலிதா மரணத்திற்கு காரணம்.. கே.பி.முனுசாமி தாக்கு!
சென்னை : ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் மௌனமாக இருந்து சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தான் ஜெ. மரணமடைந்தார் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மரண மர்மம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சசிகலாவை குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், அதிமுக பொதுக்கூட்டத்தில் அதுபற்றி பேசிய ஈபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, 32 ஆண்டுகால ஜெயலலிதாவின் தோழி எனச் சொல்லிக் கொண்டிருந்த சசிகலா துரோகியாக செயல்பட்டுள்ளார் என விமர்சித்துள்ளார்.
மேலும், ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவுக்கு ஆதரவாக, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்காமல் மௌனமாக இருந்ததால் ஜெயலலிதா இறந்து விட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

கேபி முனுசாமி பேச்சு
அதிமுகவின் 51-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கிருஷ்ணகிரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான அசோக் குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, கலந்து கொண்டு பேசினார்.

சசி கட்டுப்பாட்டில் ஜெ.
அப்போது பேசிய கேபி முனுசாமி, "ஜெயலலிதா மறைவு குறித்து நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட 75 நாள் சிகிச்சை தொடர்பாக யாரெல்லாம் உத்தரவு பிறப்பித்தார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை சசிகலா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்றும் தான் சொல்லும் சிகிச்சையைத் தான் அளிக்க வேண்டும் என்றும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை அளிக்க மறுத்த சசிகலா
பல நாடுகளில் இருந்து வருகை தந்த மருத்துவர்கள் ஜெயலலிதாவை பரிசோதித்ததில் அவருக்கு இதய கோளாறு இருந்ததையும், அதற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு சசிகலா மறுத்துவிட்டார் என்றும் அதனை மருத்துவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

தர்மத்தைக் கொன்ற ஓபிஎஸ்
அப்போது பொறுப்பு முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அவர் தான் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான முடிவுகளை எடுத்திருக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவுக்கு ஆதரவாக, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்காமல் மௌனமாக இருந்ததால் தர்மம் செத்து விட்டது, ஜெயலலிதாவும் இறந்துவிட்டார்.

சசிகலா குடும்பம்
ஜெயலலிதா மரணத்திற்கு காரணகர்த்தா சசிகலா என நீதியரசர் ஆறுமுகசாமி தெளிவாக கூறியுள்ளார். 32 ஆண்டுகால ஜெயலலிதாவின் தோழி எனச் சொல்லிக் கொண்டிருந்த சசிகலா, இவ்வளவு பெரிய துரோகியாக செயல்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் புகழை வைத்து பல்லாயிரம் கோடிகளை சசிகலா குடும்பம் சம்பாதித்துள்ளது.

அந்த ‘டீம்’
ஜெயலலிதாவை முன்னிறுத்தி ஒரு டீம் செயல்பட்டது. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதுமே அந்த டீம் சசிகலா கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது. சிகிச்சை அளிக்க வேண்டிய அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் சசிகலா கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது. ஆனால், ஜெயலலிதாவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கம் சசிகலாவுக்கு இல்லை." எனப் பேசியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications