'ஜெய’லலிதா + ராமச்’சந்திரன்’ = ஜெயச்சந்திரன்! தீர்ப்புக்கு இதுதான் காரணம்? ஜெயபிரதீப் அடடே விளக்கம்!
சென்னை : எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா அதிமுகவையும், அதன் தொண்டர்களை காக்கும் எனவும், அது தொடர்பாக ஓபிஎஸ்ஸின் மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை சமூக வலைதளங்களில் கவனத்தை பெற்றிருக்கிறது.
Recommended Video
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து ஓபிஎஸ் இல்லம் முன்பாக அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

அதிமுக பொதுக்குழு
இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்துள்ளார். அதன்படி, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது, எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும் தீர்ப்பளித்தார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
மேலும் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்தே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து இதனையடுத்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக, அதிமுக கழக நிரந்தர ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் வாழ்க என வாழ்த்து கோசங்களை எழுப்பியும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
![[[ஜெய]]லலிதா [[ஜெய]]லலிதா](https://imagesvs.oneindia.com/ta/img/2022/08/screenshot48080-1660730595.jpg)
[[ஜெய]]லலிதா
இந்நிலையில்எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா அதிமுகவையும், அதன் தொண்டர்களை காக்கும் எனவும், அது தொடர்பாக ஓபிஎஸ்ஸின் மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை சமூக வலைதளங்களில் கவனத்தை பெற்றிருக்கிறது.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"சத்தியமே ஜெயம்!! இதயதெய்வம் புரட்சித்தலைவி [[ஜெய]]லலிதா அம்மா, இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்[[சந்திரன்]] ஐயா ஆகிய இருபெரும் தலைவர்களின் பூத உடல் மறைந்தாலும்...

வெற்றி நமதே
‘அவர்களின் ஆன்மா ஏதோ ஒரு ரூபத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் உண்மை தொண்டர்களையும் கண் இமை போல காப்பாற்றி, வழி நடத்தும் என்பதற்கு இன்று உயர்நீதிமன்ற நீதியரசர் ஐயா உயர்திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினால் நிரூபணம் ஆகியுள்ளது. வெற்றி நமதே!!" என பதிவிட்டுள்ளார்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications