அந்த பதவிக்கு கேபி முனுசாமி குறிவைத்தார்.. எடப்பாடியே சொன்னாரே.. குண்டு போட்ட ஓபிஎஸ் டீம்! ஆஹா!
சென்னை : கேபி முனுசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி கேட்கிறார், நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள் என எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் நாஞ்சில் கோலப்பன்.
ஓபிஎஸ் ஆதரவாளரான நாஞ்சில் கோலப்பன், அவ்வப்போது அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், அவர் அதிமுக மூத்த தலைவர் பொன்னையனுடன் பேசிய ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், கேபி முனுசாமி பற்றி ஒரு தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் நாஞ்சில் கோலப்பன். தனியார் இணைய ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியின்போது இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார்.

ஆடியோ அதிர்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்தைச் அதிமுக பிரமுகரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான நாஞ்சில் கோலப்பன் என்பவரிடம், அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் போனில் பேசியதாக சில வாரங்களுக்கு முன்பு ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமி தொடங்கி முன்னாள் அமைச்சர்கள் பலர் தொடர்பான பல்வேறு ரகசியங்களையும், கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் அந்த ஆடியோவில் புட்டுப் புட்டு வைத்தார். பொன்னையன் அந்த ஆடியோவில் ஈபிஎஸ் தரப்பு மாஜிக்கள் பலரையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அய்யோ நான் இல்ல
ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதில் பேசியது தான் இல்லை என்றும், மிமிக்ரி செய்யப்பட்டது என்றும் பொன்னையன் மறுப்பு தெரிவித்தார். ஆனால், போனில் மறுபுறம் பேசிய அதிமுகவைச் சேர்ந்த குமரி மாவட்ட நிர்வாகி நாஞ்சில் கோலப்பன், போனில் பேசியது தானும், முன்னாள் அமைச்சர் பொன்னையனும் தான் எனத் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பான ஆதாரமும் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்தார் நாஞ்சில் கோலப்பன்.

கொளுத்திப் போட்ட கோலப்பன்
இந்த ஆடியோ அதிமுக வட்டாரத்தில் புயலைக் கிளப்பிய நிலையில், தன்னிடம் மேலும் ஒரு 3 நிமிட ஆடியோ இருப்பதாகவும், அதனை வெளியிட்டால் அதிமுகவே இருக்காது, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும்போது அதிமுக தொண்டர்களுக்கு என்னென்ன துரோகங்களைச் செய்திருக்கிறார் என்று பொன்னையன் விளக்கமாகச் சொல்லி இருக்கிறார் என கொளுத்திப் போட்டார் கோலப்பன்.

மீண்டும் பகீர்
இந்நிலையில், தற்போது இணைய ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன், எடப்பாடி பழனிசாமி அணி பற்றி மற்றொரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு திமுக ஆட்சியமைத்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் தொடர்பாக அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டபோது நடந்த சம்பவங்களைப் பற்றிப் பேசியுள்ளார் நாஞ்சில் கோலப்பன்.

பதவி - போராட்டம்
எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் நீடிப்பதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது பற்றிப் பேசியுள்ள நாஞ்சில் கோலப்பன், ஜெயலலிதாவே எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொடுத்தார். அதையெல்லாம் பார்த்த ஓபிஎஸ் துணைத் தலைவர் பதவிக்காக ஆசைப்படுபவர் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

கேபி முனுசாமி கேட்கிறார்
எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை வாங்க மாட்டேன் என அப்போதே சொன்னார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டையனும், "கேபி முனுசாமி இந்த பதவியை விரும்புகிறார். அதனால் இந்த பதவியை நீங்க ஏத்துக்கணும்" என்று கூறினார்கள். ஓபிஎஸ்ஸுக்கு இந்த பதவியை பெற விருப்பம் இல்லை என கோலப்பன் கூறியுள்ளார்.

ஈபிஎஸ் சம்மதிக்க வைத்தார்
எனினும், கட்சியின் நிலை வேறு மாதிரி செல்வதால், குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே பதவியை பெற்றார் ஓபிஎஸ். கேபி முனுசாமி, தனபால் ஆகியோரிடம் பதவி கொடுத்தால் சிக்கல் ஏற்படும் என பேசிப் பேசி, ஓபிஎஸ்ஸை சம்மதிக்க வைத்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள வைத்தார்கள். அப்போதே நிர்ப்பந்தித்து தான் ஓபிஎஸ்ஸுக்கு பதவி கொடுத்தார்கள் என கோலப்பன் தெரிவித்துள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications