திறந்த வீட்டில்.. இங்க ஒண்ணும் இல்ல.. இங்கிலாந்து போறீங்களாய்யா?- கடுமையா வார்த்தையை விட்ட புகழேந்தி
சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வதற்காக பாதுகாப்பு கேட்டோமே தவிர, ஓபிஎஸ் கட்சி பணிகளை மேற்கொள்ள எப்போது வேண்டுமானாலும் உள்ளே செல்வார், நாங்களும் செல்வோம். யாராலும் தடுக்க முடியாது என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி.
எடப்பாடி பழனிசாமி, அதிமுக அலுவலகத்திற்குள் ஓபிஎஸ்ஸை கேட்காமல் சென்றது தவறு என்றும், அதிமுக அலுவலகத்தின் உரிமையாளர், அதிகாரம் பெற்றவர் ஓபிஎஸ் தான் என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளரே இல்லை என்றும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அவர் எப்படி உள்ளே சென்றார் என்றும் கோபமாகப் பேசியுள்ளார் புகழேந்தி.

அதிமுக பரபரப்பு
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு நேற்று முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். ஓபிஎஸ்ஸும் அங்கு செல்லத் திட்டமிட்டு வருகிறார். ஓபிஎஸ் தலைமை அலுவலகம் செல்ல இருப்பதால் பாதுகாப்பு கோரி சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஜே.சி.டி.பிரபாகர் மனு அளித்தார். இதையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி, ஜெயக்குமார் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இதனால், தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

திறந்த வீட்டில் நுழைவது போல்
இந்த கொதிப்பான சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, "ஓ.பன்னீர்செல்வம் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர். அதிமுக அலுவலகத்தின் உரிமையாளர், அதிகாரம் பெற்றவர் ஓபிஎஸ். அவரது அனுமதி இன்றி எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றது தான் அத்துமீறல். அவரை கேட்காமல் சென்றது தவறு. இது குறித்து டிஜிபியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை கேட்காமல் திறந்த வீட்டில் நுழைவது போல் நுழைந்தது தவறு.

நாங்கள் போவோம்
அலுவலகம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நாங்கள் அலுவலகத்திற்குப் போகக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்கள். உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு செல்லும் என்று தான் சொல்லி இருக்கிறதே தவிர வேறு எதுவும் சொல்லவில்லை. எடப்பாடி பழனிசாமி தான் இடைக்கால பொதுச் செயலாளர் என எந்த இடத்திலாவது சொல்லப்பட்டு இருக்கிறதா?

தடுக்க முடியாது
அவராகவே அந்த பதவியை பயன்படுத்தி கொள்கிறார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது இவர் எப்படி உள்ளே சென்றார்? அதிமுக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும். கழக பணியாற்றிட அதிமுக அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் எப்போது வேண்டுமானாலும் செல்வார். நாங்களும் செல்வோம். அதிமுக அலுவலகத்திற்கு செல்வதற்காக பாதுகாப்பு கேட்டோமே தவிர ஓபிஎஸ் கழகப் பணிகளை மேற்கொள்ள எப்போது வேண்டுமானாலும் உள்ளே செல்வார். யாராலும் தடுக்க முடியாது.

துரோகி யார்
எல்லோரையும் ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருவதை வைத்திலிங்கமும் சொல்கிறார். சசிகலா இல்லை என்றால் எடப்பாடி பழனிசாமியால் முதலமைச்சராகி இருக்க முடியுமா? யார் துரோகி என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். ஜெயலலிதாவால் முதலமைச்சராக அமர வைக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து துரோகி எனக் கூறுகிறார்.

யார் காலில் விழுந்தாவது
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் ஓ.பன்னீர்செல்வமும் யாரையும் அநாகரிகமாக பேசுவது இல்லை. யாரையும் இணையவிடாமல் எடப்பாடி பழனிசாமி செய்வதற்கு காரணம் என்ன? யார் காலில் விழுந்தாவது வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவை உடைக்கப் பார்க்கிறார். அவர் யாருக்கு ஆதரவாக இருப்பார் என்பதை காலம் பதில் சொல்லும். நாட்டு மக்கள் ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கிறது. அவரை முதலமைச்சராக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.

இங்கிலாந்துக்கு போங்க
எடப்பாடி பழனிசாமி தனி மனிதனாக தவிக்கவிடப்படுவார். இங்கிலாந்து இளவரசி இறப்புக்கு அடுத்து நான்கு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. நான்கு நாட்களுக்கு பிறகு சென்று அந்த காலி இடத்தை வேண்டுமானால் எடப்பாடியும் ஜெயக்குமாரும் நிரப்பலாமே தவிர இங்கு ஒன்றும் அவர்களால் செய்ய முடியாது." எனத் தெரிவித்துள்ளார் புகழேந்தி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications