சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக அரசின் நடவடிக்கை.. 'அபாயகரமான சூழ்நிலை'அரசியல் ரீதியில் உருவாகும்..ஓ பன்னீர்செல்வம் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை : அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார். அரசியல் ரீதியாக சந்திக்க முடியாமல் திமுக இருக்கிறது என்றும் இது போன்ற நடவடிக்கைகளை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.

Recommended Video

    DMK-ன் நடவடிக்கைகள் அரசியலில் அபாயகரமான சூழ்நிலை உருவாக்கலாம்.. OPS எச்சரிக்கை

    எந்த ஒரு புதிய அரசு இதுபோன்ற நடவடிக்கை எடுக்கும்போது ஒரு அபாயகரமான சூழ்நிலை அரசியல் ரீதியில் உருவாவதற்கு அடித்தளமாக அமையும் என்றும் ஓ பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார்.

    மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங் மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்

    கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் . இவரது வீடு கரூரில் உள்ளது. இவரது வீடு, இவருக்கு சம்பந்தப்பட்ட இடங்கள், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர் வீடுகள் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களின் ஊழல் புகார் குறித்து அடுத்தடுத்து நடவடிக்கை பாயப்போவதாகவும், அதன் முதல் தொடக்கப்புள்ளி தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு என்றும் கூறப்படுகிறது.

    ஓபிஎஸ் பேச்சு

    ஓபிஎஸ் பேச்சு

    இந்த ரெய்டு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக 4மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அரசியல் ரீதியாக எதிர்கொண்டு எங்களைச் சந்திக்க முடியாத நிலையில் இருக்கிறது திமுக. எனவே தான் இப்படி அச்சுறுத்துகிறது. ஆனால் எந்த நிலையிலும் எங்களை எதிர்கொள்ள முடியாது. எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

    சட்டபூர்வமான நடவடிக்கை

    சட்டபூர்வமான நடவடிக்கை

    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். சட்டபூர்வமான நடவடிக்கை எதுவாக இருந்தாலும் அதை அதிமுக நிச்சயமாக சந்திக்கும். இன்றைக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு சம்பந்தப்பட்ட இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ரெய்டு மிகவும் கண்டனத்துக்குரியது.

    எச்சரிக்கும் ஓபிஎஸ்

    எச்சரிக்கும் ஓபிஎஸ்

    எந்த ஒரு புதிய அரசும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கும்போது ஒரு அபாயகரமான சூழ்நிலை அரசியல் ரீதியில் உருவாவதற்கு அடித்தளமாக அமையும் என்பது ஏற்கெனவே தமிழகத்தில் நல்ல பாடமாக அமைந்துள்ளது. ஆகவே, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசியல் ரீதியாக, ஜனநாயகக் கடமைகளை முறையாக நிறைவேற்றிய அதிமுக மீது ஜனநாயக விரோத நடவடிக்கைகளைத் தொடுத்துள்ளது கண்டனத்துக்குரியது" இவ்வாறு கூறினார்.

    ஜெயலலிதா பல்கலைக்கழகம்

    ஜெயலலிதா பல்கலைக்கழகம்

    இதையடுத்து பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தார். பிந்தங்கிய மாவட்டமான விழுப்புரம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்கள் உயர்க்கல்வியில் மேன்மைபெற ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதாகவும் ஆனால் ஜெயலலிதா பெயரில் உள்ள காரணத்தால் காழ்ப்புணர்ச்சியோடு அந்த பல்கலைக்கழகத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

    எடப்பாடி பழனிசாமி வரவேற்பு

    எடப்பாடி பழனிசாமி வரவேற்பு

    பல்கலைக்கழகத்தை மாற்றும் முடிவுக்கு நிதி பற்றாக்குறை என காரணம் கூறப்படுவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, மதுரையில் நூலகம் அமைக்க மட்டும் எங்கிருந்து நிதி வந்தது என கேள்வி எழுப்பினார். மேலும் மதுரையில் நூலகம் அமைக்கும் அரசின் முடிவை வரவேற்பதாக தெரிவித்தார்

    English summary
    O Panneerselvam warns mr vijayabaskar house raid that a dangerous situation will arise politically due to the action of the DMK government over.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X