பஸ்சா? இல்லை காரா? எந்த வாகனம் முதலில் செல்ல வேண்டும்? 5 செகண்டில் கண்டுபிடிங்க பார்க்கலாம்.. சவால்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், சாலையில் எதிரெதிர் திசையில் ஒரு காரும் பேருந்தும் வருகின்றன. 4 முனை சந்திப்பு கொண்ட அந்த சாலையில், கார் நேராக செல்ல வேண்டும். பேருந்தோ வலதுபக்கமாக திரும்பி செல்ல வேண்டும். இரண்டு சிக்னலிலும் பச்சை நிற லைட் எரிகின்றது. இதில் எந்த பேருந்து முதலில் செல்ல வேண்டும் என்பதை கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். 5 செகண்டுக்குள் விடையை சொல்லுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன், புதிர் படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் என்பதை ஒளியியல் மாயை படங்கள் என்று சொல்லலாம். இந்த படங்கள் மேலோட்டமாக பார்த்தால் ஒரு விதமாகவும் ஆழந்து பார்த்தால் வேறு விதமாகவும் இருக்கும். படத்திற்கான விடை நேரடியாக கண்டுபிடிக்க முடியாது.

ஆழ்ந்து பார்த்தால் மட்டுமே விடையை கண்டுபிடிக்க முடியும். அதாவது நூறு ஆடுகளுக்கு மத்தியில் ஒரே ஒரு செம்மறி ஆட்டை விட்டு அதை 10 வினாடிக்குள் கண்டுபிடியுங்கள் என்றால் எப்படி தடுமாறி விடுவோமோ அதேபோல, இல்யூஷன் படங்கள் இருக்கும். இந்த இல்யூஷன் படங்கள் மூளைக்கு வேலை வைத்து நமது புத்திக் கூர்மையை சோதித்து பார்ப்பதால், நெட்டிசன்கள் பலரும் விடையை கண்டுபிடித்துவிட்டு தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் பகிர்கிறார்கள்.
இதனால், இந்த இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிகமாக பரவுகின்றன. சரி அதெல்லாம் இருக்கட்டும். இங்கே விஷயத்திற்கு வருவோம்.. இன்று நாம் பார்க்க இருக்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படம் சற்று வித்தியாசமானது. வழக்கமான பாணியில் இல்லாமல், ஒருவரின் முடிவு எடுக்கும் திறன் எப்படி உள்ளது.. ஒரு விஷயத்தை எந்த மாதிரியாக அணுகுகிறார் என்பதை கண்டுபிடிக்கும் வகையில் இந்த புதிர் படம் உள்ளது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் சாலையில் எதிரெதிர் திசையில் ஒரு காரும் பேருந்தும் வருகிறது. நான்கு முனை சந்திப்பு கொண்ட அந்த சாலையில், கார் நேராக செல்ல வேண்டும். பேருந்தோ வலதுபக்கமாக செல்ல வேண்டும். ஆனால், இரண்டும் சரிசமமான தொலைவில் உள்ளது. இந்த இரண்டு வாகனத்தில் எந்த வாகனம் முதலில் செல்ல வேண்டும்.. எந்த வாகனம் வழி விட வேண்டும் என்பதை கண்டுபிடித்து சொல்ல வேண்டும். அதுவும் 5 செகண்ட் தான் டைம்..
உங்களால் விடையை கண்டுபிடிக்க முடிகிறதா? என்று பார்க்கலாம். உங்களுக்கான நேரம் தொடங்கியது.. 1, 2, 3, 4, 5. டைம் ஓவர். பலரும் சரியான விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள்.. போக்குவரத்து விதிகளை சரியாக தெரிந்த திறன் டிரைவராக இருக்க எல்லா திறனும் இருக்கிறது. குழப்பமாக இருப்பவர்கள் கூடுதலாக 5 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. இரண்டு பக்கமும் பச்சை லைட் எரிகிறது என்பதால் விடையை கண்டுபிடிக்க உங்களுக்கு டைம் ஆகும். இப்போதும் விடையை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறீர்களா? உங்களுக்கான விடை இங்கே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
அதெல்லாம் இருக்கட்டும் சரியான விடை எது என சில நினைக்கலாம்.. பேருந்து முதலில் செல்ல வேண்டும் என்பதே இதற்கான சரியான விடையாகும். எப்படி என யோசிக்கிறீகளா.. டிராபிக் கம்பத்தில் yield sign- உள்ளது. அதாவது வலது பக்கம் திரும்பும் வாகனத்திற்கு வழி விட வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் அடையாளம் உள்ளது. எனவே, முதலில் பேருந்துக்கு வழிவிட்டு அதன்பிறகு கார் செல்ல வேண்டும் என்பதே சரியான விடையாகும்.

-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications